IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. ஐபிஎம், டிசிஎஸ், அமேசான் சொன்ன பலே விஷயம்..!

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இருக்கும் வேலையாவது நிலைக்குமா? இல்லையா? என்ற நிலையில் ஐடி துறையில் அவ்வப்போது பணியமர்த்தல் இருந்து வருவது சற்றே ஆறுதல் தரும் விஷயமாகவே உள்ளது.

இதற்கிடையில் தற்போது டிசிஎஸ், அமேசான், அமேசான், மார்கன் ஸ்டான்லி, வால்மார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள், பணியமர்த்தல் குறித்தான ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளன.

இது உண்மையில் ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ் என்று தான் கூற வேண்டும். சரி அப்படி என்ன தான் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. என்னென்ன வாய்ப்புகள் உள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.

டேட்டா சயின்டிஸ்ட்- வேலை வாய்ப்பு

டேட்டா சயின்டிஸ்ட்- வேலை வாய்ப்பு

ஐடி துறையினை பொறுத்த வரையில் கொரோனாவிற்கு பின்பு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதிகளவில் டிஜிட்டலுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருவதாகவும், விப்ரோ சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. இந்த நிலையில் மேற்கூறிய பல நிறுவனங்களும் டேட்டா சயின்டிஸ்ட் என்ற வேலைக்கு தேவை அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளன.

அதிகரிக்கும் வாய்ப்புகள்

அதிகரிக்கும் வாய்ப்புகள்

அது மட்டும் அல்ல, இந்த டேட்டா சயின்டிஸ்டுகளுக்கான வாய்ப்புகளும், அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் தெரிவித்துள்ளன. இது டிஜிட்டல் வர்த்தகம் மேம்பட்டு வரும் நிலையில் வந்துள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதுவும் குறிப்பாக டெக் நிறுவனங்களில் இந்த டேட்டா சயின்டிஸ்ட்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.

இது தான் காரணம்

இது தான் காரணம்

கொரோனா வைரஸ் ஆனது ஐடி துறையினருக்கு சற்று பின்னடைவை கொடுத்தாலும், இதில் நல்ல விஷயம் என்னவெனில் டிஜிட்டலுக்கு மாறி வரும் வாடிக்கையாளர்களால் தேவை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளன. இது ஐடி துறையினருக்கு ஒரு நல்ல விஷயமே என்றும், ஏனெனில் இதனால் புது புது வாய்ப்புகள் உருவாகும். இதனால் டேட்டா சயின்டிஸ்ட் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளன.

இது டெக்னிக்கல் வேலை

இது டெக்னிக்கல் வேலை

டேட்டா சயின்டிஸ்டுகளுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் தேவை. தற்போது வரையில் இது மிக டெக்னிக்கல் வேலையாகவே இருந்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் இதற்காக அதிக தொகையினை செலவிட்டு வருகின்றன. ஆக வரும் காலத்தில் இந்த டேட்டா சயின்டிஸ்ட்களுக்கு நல்ல வாய்ப்பும் காத்துக் கொண்டுள்ளன. ஆக ஐடி ஊழியர்கள் தங்களது திறனை வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+