இந்தியாவில் தற்போது இரண்டு முறைகளில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்கிறோம். பழைய வரி கணக்கு நடைமுறை மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு முறைகள் உள்ளன. இதில் பழைய வரி கணக்கு முறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் புதிய வரி நடைமுறையின் கீழ் இந்த பெரும்பாலான வரி சலுகைகள் கிடைப்பதில்லை ஆனால் இதில் வருமான வரி உச்ச வரம்பு என்பது அதிகமாக இருக்கிறது.
புதிய வருமான வரி கணக்கு முறையில் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு கணக்கே காட்ட தேவையில்லை, அது தவிர ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு வரி சலுகைகள் வரி கழிவுகள் கிடைப்பதால் அவர்களுக்கும் வருமான வரி என்பது பூஜ்ஜியமாக தான் இருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த ஏராளமான நபர்கள் ஒரு சின்ன டிரிக்கை பயன்படுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து வருகிறார்கள் . அதாவது ஒரு வீட்டு கணவர் வேலை செய்கிறார் மனைவி வீட்டை பராமரிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த கணவர் தன்னுடைய வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை தன்னுடைய மனைவியின் பெயரில் வந்த வருமானமாக காட்டி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுகிறார்.
இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வருமானத்தை மனைவி பெயரில் திருப்பிவிட்டு இரண்டு வருமான வரி கணக்காக தாக்கல் செய்கிறார்கள். இது வரி சேமிக்க அவர்களுக்கு உதவி செய்கிறது. ஒரு வேளை வருமான வரி துறை இதனை கண்டறிந்து விசாரணை நடத்தினால் வீட்டை பராமரிக்கும் மனைவிக்கு எப்படி இவ்வளவு வருமானம் என ஆய்வு செய்து அபராதம் விதிக்கலாம். ஆனால் வருமான வரி துறைக்கு அதனைவிட பெரிய முதலைகளை பிடிக்க வேண்டிய வேலை இருக்கிறதே.
இந்நிலையில் தான் இந்திய பட்டய கணக்காளர்களுக்கான அமைப்பான ஐசிஏஐ திருமணமான தம்பதிகள் கூட்டு முறையில் வருமான வரி கணக்கு செய்யும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறது. அதாவது ஒரு தனிநபருக்கு ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை. இதுவே அவர்கள் தம்பதியாக தாக்கல் செய்யும்போது ஆண்டுக்கு 8 லட்சம் வரை வருமான வரி கிடையாது என அறிவிக்கலாம் என பரிந்துரை செய்திருக்கிறது.
இரண்டு முறை அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இரண்டு முறை இந்த கணக்குகளை எல்லாம் ஆய்வு செய்வதற்கு மாற்றமாக தம்பதிகளுக்கு கூட்டாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் முறையை கொண்டு வரும்போது வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதும் அதனை செயலாக்கம் செய்வதும் எளிமையாகும் என்றும் வரி ஏய்ப்புகளை தடுக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. ஒரு குடும்பம் ஆனால் பல வருமான வரி கணக்கு தாக்கல் என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது.
அமெரிக்காவில் இந்த கூட்டு வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் இருப்பதாகவும் இதனை இந்தியாவிலும் கொண்டு வரும் போது பொதுமக்கள் கைகளில் பண புழக்கம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டுகிறது. அதாவது மக்கள் கைகளில் கூடுதலாக 80,000 கோடி ரூபாய் வரை சேர்ந்து அவர்கள் அதனை செலவு செய்து மறைமுகமாக பொருளாதாரத்தை ஊக்குவிப்பார்கள் என்கிறது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் தான் இது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடுமா இல்லையா என்பது தெரிய வரும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications