டெல்லி: பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது குறித்து மத்திய அரசுக்கு தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு துறையை சார்ந்த பிரதிநிதிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்களுக்கான இந்திய நிறுவனம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்கியுள்ளது. அதில் திருமணமான தம்பதிகள் கூட்டாக தங்களுடைய வருமான வரி கணக்கு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் இவ்வாறு தம்பதிகள் கூட்டாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே வேலைக்கு சென்று சம்பாதிப்பவராக இருக்கும் குடும்பங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை பெருமளவில் தடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது “joint taxation of married couples” என்ற ஒரு புதிய பிரிவினை ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் விருப்பப்பட்டால் தம்பதி சமிதமாக கூட்டாக தாக்கல் செய்யலாம் அல்லது தனித்தனியாகவும் தாக்கல் செய்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளனர். இவ்வாறு தம்பதிகளாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விதிக்க கூடாது என கேட்டு கொண்டுள்ளனர்.
6 முதல் 14 லட்சம் வரைவிலான வருமானத்திற்கு 5% , 14 முதல் 20 லட்சம் வரை நான் வருமானத்திற்கு 10% , 20 முதல் 24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15%, 24 முதல் 30 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20%, 30 லட்சம் ரூபாய் மேல் உள்ள வருமானத்திற்கு 30% என்ற அளவில் வரி பிடித்தம் செய்யலாம் என பரிந்துரை வழங்கியுள்ளனர்.
கணவன் மனைவி இருவருமே ஊதியம் பெறக்கூடிய நபர்களாக இருந்தால் அவர்கள் இருவருக்குமே நிலையான கழிவுத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் கூடுதல் வரிக்கான வரம்பையும் உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். உதாரணமாக 1 கோடி ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்தவித கூடுதல் வரியும் வசூலிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே இது போல தம்பதிகள் கூட்டாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை அமலில் இருக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் மூலம் மக்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் தானாகவே வருமான வரி தாக்கல் செய்ய முன் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டாக கணக்கு தாக்கல் செய்தால் அதிகபட்ச வருமான வரம்பும் கிடைக்கும் என கூறியுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications