இந்திய மக்களிடையே தொலைக்காட்சிகளை தாண்டி செல்போன்கள் முக்கியமான இடத்தை பிடித்து விட்டன. தொலைக்காட்சியில் பார்த்து வந்த அனைத்து நிகழ்வுகளும் தற்போது செல்போன்களிலேயே காணமுடிகிறது. இதற்காக பிரத்தியேக செயலிகள், இணையதளங்கள் உள்ளிட்டவை நமக்கு கிடைக்கின்றன.
அந்த வகையில் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிக்கு நிகராக ஸ்மார்ட் போன்களில் பார்க்கக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்டார் செயலி இந்தியாவில் கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் தளங்களில் முதலிடத்தில் இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார்-இல் திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றைக் கடந்து அதிகமாக மக்கள் பார்க்கப்படும் ஒரு நிகழ்வாக கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன .

வீட்டில் இல்லாமல் டிராவல் செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது அலுவலகங்களில் இருப்பவர்கள் அவ்வப்போது ஜியோ ஹாட்ஸ்டார் செயலி வாயிலாக கிரிக்கெட் போட்டியை நேரலையில் பார்த்து என்ன ஸ்கோர் என்பதை தெரிந்து கொள்வார்கள். அந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களின் போனில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் ஒரு செயலியாக ஜியோ ஹாட்ஸ்டார் தற்போது இடம் பிடித்திருக்கிறது.
ரிலையன்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஜியோ ஹாட்ஸ்டார் 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமங்களை வாங்கி இருந்தது . கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் மதிப்புக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இந்த உரிமங்களை பெற்றிருந்தது. இதில் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் பெண்கள் உலக கோப்பை 2025 போட்டிகள் ஆகியவை ஒளிபரப்பப்பட்டு விட்டன .
2026 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்க கூடிய ஒரு போட்டியாக இது இருக்கப் போகிறது. இந்த சூழலில் நிதி இழப்புகள் காரணமாக ஜியோ ஹாட்ஸ்டார் 2026 டி20 உலக கோப்பைக்கு முன்பாகவே ஒளிபரப்பு உரிமம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விரும்புவதாக ஐசிசிக்கு தகவல் தெரிவித்துள்ளது.

விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பு செய்வதில் கடுமையான இழப்பு ஏற்பட்டதாகவும் இந்த ஒப்பந்தத்தை இனி எங்களால் தொடர முடியாது என்றும் ஜியோ நிர்வாகம் ஐசிசி இடம் அறிவித்து விட்டதாக எக்னாமிக் டைஸ் செய்தி குறிப்பிடுகிறது. ஜியோவின் இந்த முடிவு ஐசிசி நிர்வாகத்திற்கே அதிர்ச்சியை தந்துள்ளது. எனவே ஐசிசி 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒளிபரப்பு உரிமத்தை ஜியோவுக்கு மாற்றாக வேறு நிறுவனத்திற்கு வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
சோனி, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களுடன் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய இந்த நிறுவனங்கள் முன்வருமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும். ஆண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது . ஜியோ ஹாட்ஸ்டாரின் திடீர் முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளை போனில் கண்டு ரசிக்க முடியாதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் விளையாட்டு போட்டிகள் சம்பந்தப்பட்ட ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் மூலம் 2023- 24 ஆம் ஆண்டில் 12,319 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருந்தது, அது 2024-25 ஆம் ஆண்டில் 25,760 கோடி ரூபாய் என இரண்டு மடங்காக உயரும் என கணித்துள்ளது. இதற்கிடையே அண்மையில் ரியல் மணி கேமிங் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. எனவே இவர்களின் ஸ்பான்சர் மற்றும் விளம்பரங்கள் இனி கிடைக்காது. இதுவே சுமார் 7000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications