ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தாலும், வர்த்தக உலகில் இந்த கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் பண்டிகை காலம் ஓன்றாக வரும் காரணத்தால் எப்படி அதிகமாக வர்த்தகத்தை பெறுவது என திட்டமிட துவங்கியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் வந்த பின்பு இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் கிரிக்கெட் பெரும் வர்த்தகம், விளம்பரம் செய்யும் தளமாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் மூலம் சுமார் 150 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1,248 கோடி ரூபாய்க்கு மேல் ஸ்பான்சர்ஷிப் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல பிராண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள நிலையில், வர்த்தகம், சந்தை டிமாண்ட்-க்கு ஏற்ப ஸ்பான்சர்ஷிப் வருவாய் அதிகரிக்கும் என்பது சந்தை கணிப்புகள். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட்டுக்கான உலகளாவிய அமைப்பாக விளங்குவது அனைவருக்கும் தெரியும்.
ஐசிசி வெளியிட்ட தரவுகலள் படி உலகக் கோப்பை போட்டிகளுக்காக சுமார் 20 ஸ்பான்சர்கள் மற்றும் பார்ட்னர்ஸ் போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் டாப் 6 பிராண்டாக MRF Tyres, Booking.com, IndusInd Bank, MasterCard, Aramco மற்றும் Emirates ஆகியவை இடம்பெற்றுள்ளது.
இந்த 6 நிறுவனங்களும் சுமார் 8-10 மில்லியன் டாலர் தொகையை ஸ்பான்சர்ஷிப்-க்காக கொடுத்துள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தொகைய அதிகரிக்கவும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
மேலும் official partner ஆக சுமார் 8 பிராண்டுகள் சேர்க்கப்பட்டு உள்ளது, இந்த பட்டியலில் Bira91, Polycab, Thums-Up, Upstox, Nissan, Nium, Oppo மற்றும் DP World ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனகங்கள் சுமார் 6-8 மில்லியன் டாலர் தொகையை ஸ்பான்சர்ஷிப்-க்காக கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதை தாண்டி கேட்டகரி பார்ட்னராக Royal Stag, Dream11, Jacob's Creek, Near Foundation, Fan Craze, மற்றும் Tyka ஆகிய பிராண்டுகள் 3 - 4 மில்லியன் டாலர் ஸ்பான்சர்ஷிப் தொகையுடன் இணைந்துஸ்எளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஸ்பான்சர்ஷிப் தொகை குறித்து இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து மாஸ்டர் பிளாஸ்டர், காட் ஆஃப் கிரிக்கெட் என பல பெயர்களுடன் கொண்டாடப்படும் சச்சின் டென்டுல்கர் குளோபல் அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சச்சின் இதுவரையில் 6 உலக கோப்பை போட்டியில் கலந்துக்கொண்டு ஓரு போட்டியில் உலக கோப்பையை வென்றுள்ளார். எல்லா புகழும் தோனிக்கே..
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications