பிரிட்டனில் உள்ள இந்திய மாணவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து மேல்படிப்புக்காக பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் உள்ள இந்திய மாணவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் ஆன்லைன் மூலம் சேமிப்பு வங்கி கணக்கை தொடங்குவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஐசிஐசிஐ வங்கி
இந்தியாவின் தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி பிரிட்டனில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு HVCA (HomeVantage Current Account) என்ற புதிய வங்கி கணக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த வங்கி கணக்கு பிரிட்டனில் உள்ள இந்திய மாணவர்களின் வங்கி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெபிட் கார்டு
இந்த வங்கிக் கணக்கை தொடங்கும் மாணவர்களுக்கு விசா டெபிட் கார்டு வழங்கப்படும் என்றும் இது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு இந்தியாவில் ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்கியதற்கு சமம் என்பதும் இந்தியாவில் இருக்கும் போதும் பிரிட்டனில் இருக்கும் போதும் இந்த வங்கிக்கணக்கை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன்
வங்கி கிளைக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமே பிரிட்டனில் உள்ள இந்திய மாணவர்கள் இந்த வங்கிக்கணக்கைத் தொடங்கி கொள்ளலாம். வங்கி கணக்கு தொடங்கிய பிறகு அவர்களுக்கு இணைய வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, டெபிட் கார்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஐசிஐசிஐ வங்கி செய்து கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிஐசிஐ வங்கியின் HVCA என்ற கணக்கை தொடங்கும் மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின்படி டெபிட் கார்டை இந்தியா அல்லது இங்கிலாந்தில் உள்ள அவர்களின் முகவரிக்கு அனுப்பப்படும்.
HVCA கணக்கை தொடங்குவது எப்படி?
முதலில் ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் ஆப் அல்லது இணையதளம் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். அதன்பின் அசல் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து, பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து உங்களுக்கு என ஒரு வங்கிக்கணக்கு தொடங்கப்படும். வங்கிக் கணக்கை தொடங்கியவுடன் தகுதியுள்ள மாணவர்கள் உடனடியாக இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கிச் சேவையை பயன்படுத்தலாம். வங்கி கணக்கு தொடங்கிய ஒருசில நாட்களில் டெபிட் கார்டு நீங்கள் கொடுத்த முகவரிக்கு வந்து சேரும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications