இந்தியாவின் 2வது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, அதன் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் செய்த மோசடி குறித்த வழக்கு நடந்து வரும் வேளையில், ஆர்பிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது
ஐசிஐசிஐ வங்கியின் பகுதி நேர தலைவராக (Part-time Chairman) பிரதீப் குமார் சின்ஹாவை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சின்ஹா ஜூலை 1, 2024 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருக்கப்போகிறார்.

ஜூன் 30, 2024 அன்று, ஐசிஐசிஐ வங்கியின் ஜி.சி. சதுர்வேதி நான்-எக்ஸிகியூட்டிவ் பார்ட் டைம் சேர்மன் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இந்த காலி இடத்தை நிரப்புவதற்காக பிரதீப் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஜி.சி. சதுர்வேதி-யின் பதவிக் காலம் ஜூன் 30, 2024 அன்று வேலை நேரத்தின் முடிவுடன் வெளியேற உள்ள வேளையில் அடுத்த நாள் ஜூலை 1, 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் பிரதீப் குமார் சின்ஹா இருக்கப்போகிறார்.
யார் இந்த பிரதீப் குமார் சின்ஹா?: ஐசிஐசிஐ வங்கியின் இணையதளத்தின்படி, 1976 ஆம் ஆண்டு டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, 1977 ஆம் ஆண்டு IAS ஆனார்.
பிரதீப் குமார் சின்ஹா IAS பதவியேற்ற உடன் உத்தரபிரதேசத்தில் பணியாற்றினார், அதன் பிறகு அவர் பெரும்பாலான காலகட்டத்தில் இந்திய அரசு பணிகளில் பணியாற்றினார், அரசு பணியில் இருக்கும் போது உச்சபட்சமாக கேபினட் செயலாளர் பதவி வரையில் உயர்ந்தார்.
பிரதீப் குமார் சின்ஹா பிரதமர் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு 4 ஆண்டுகளுக்கும் மேலாக கேபினட் செயலாளராக பணியாற்றினார். 44 வருடங்கள் அரசு பணியில் தொடர்ந்து பணியாற்றி வந்த அவர் மார்ச் 2021ல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பிரதீப் குமார் சின்ஹா அரசு பணியில் இருக்கும் போது, மத்திய அரசு நிறுவனங்களான ONGC, IOCL, HPCL, BPCL, GAIL போன்ற பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் அரசாங்க நியமன இயக்குநராக இருந்துள்ளார்.
குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) நிர்வாக குழுவில் சுமார் 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்தார். BPCL மற்றும் HPCL நிர்வாக குழுவில் தலா 6 ஆண்டுகள்.
அவர் சுமார் 15 ஆண்டுகள் மின்சாரம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகங்களில் பணியாற்றினார். இது மட்டும் அல்லாமல் பிரதீப் குமார் சின்ஹா நிதி ஆலோசகர் மற்றும் சிறப்பு செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு செயலாளர், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து செயலாளர், மின்சார துறையிலும் பணியாற்றியுள்ளார்.
எனர்ஜி, இன்பராஸ்டக்சர், போக்குவரத்து, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நிதி ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதீப் குமார் சின்ஹா. ஐசிஐசிஐ வங்கியில் இவருடைய வருகை பல முக்கிய மாற்றத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கியின் இன்பராஸ்டரக்சர் துறை வர்த்தகத்தை மேம்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications