சென்னை: கடந்த சில மாதங்களாக பல்வேறு வங்கிகள் தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ள நிலையில், ஐசிஐசிஐ வங்கியும் தனது டெபிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் புதிய கட்டணம், புதிய மாற்றம் போன்றவை அதிகப்படியான மக்களைப் பாதிக்க உள்ளது.
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் சில டெபிட் கார்டுகளுக்கு விமான நிலைய லவுஞ்ச் சேவையைப் பெறும் விதிமுறைகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2024 முதல் லவுஞ்ச் சேவைகளை 2 முறை மட்டுமே இலவசமாகப் பெற முடியும். ஆனால் இதற்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் 2024 காலாண்டில் ரூ.10,000 செலவிட்டு இருக்க வேண்டும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024 காலாண்டில் இலவச லவுஞ்ச் அணுகலைப் பெற, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் 2024 காலாண்டில் குறைந்தது ரூ.10,000 செலவிட வேண்டும். அதன் பின்னர் அடுத்தடுத்த காலாண்டுகளுக்கும் இதே விதிமுறை பொருந்தும் என்று விளக்கம் கொடுத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.
இந்த மாற்றத்தால் டெபிட் கார்டு பயனர்கள் தங்கள் செலவினங்களைத் திட்டமிட வேண்டியிருக்கும். விமான நிலையத்தில் லவுஞ்ச் சேவையைப் பயன்படுத்துவதைத் திட்டமிடுபவர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பெரும் பகுதிகளை விமானம் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும் இதேவேளையில் விமானச் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாமல் நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றனர், அதிலும் முக்கியமாகப் பிராந்திய விமான நிலையங்களில் உதாரணமாகச் சேலம், திருநெல்வேலி போன்ற விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இத்தகைய லவுஞ்ச் சேவைகள் பெரிய விமான நிலையத்தில் மட்டுமே இருக்கும் உதாரணமாகப் பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி போன்ற விமான நிலையத்தில் உள்ளது. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் மக்கள் அதிகமாக இந்த லவுஞ்ச் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். சில கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை வைத்துள்ளவர்களுக்கு இது இலவசமாக வழங்கப்படுவதால் அதிக எண்ணிக்கையில் இச்சேவையைப் பயன்படுத்தப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications