அமெரிக்காவின் Silicon Valley Bank வீழ்ச்சி அடைந்தாலும் இதனுடைய பிஸ்னஸ் மாடல் மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ICICI வங்கி செவ்வாய்க்கிழமை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான அனைத்து டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் சேவைகளை ஒரே இடத்தில் மொத்தமாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் ஸ்டார்ட்அப் நிறுவன சீட் ஸ்டேஜ் முதல் சீரியஸ் ஏ, பி, சி, டி, ஈ, எப் என அனைத்து கட்ட நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
குஜராத்-ல் இருக்கும் குளோபல் பைனான்சியல் மற்றும் ஐடி ஹப் ஆக இருக்கும் கிப்ட் சிட்டியில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி கிளையில், இவ்வங்கியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி இந்த சேவையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி தற்போது அறிவித்துள்ள Startup Ecosystem Banking வாயிலாக டிரசரி, டிரான்ஸ்சேக்ஷன் பேங்கிங் சொல்யூஷன்ஸ், லென்டிங் சொல்யூஷன்ஸ், டிஜிட்டல் இன்டிகிரேஷன்ஸ், FDI மற்றும் ஊழியர்கள் முதல் நிறுவன தலைவர்கள் வரையில் அனைவருக்கும் பர்சனல் பேங்கிங் சேவைகளை அளிக்க உள்ளது.
உலக நாடுகளில் வர்த்தகம்
ஐசிஐசிஐ வங்கியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி தனது சேவைகளை இந்தியாவில் இருந்து நியூயார்க், டொராண்டோ, லண்டன், துபாய், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய முக்கிய நகரங்களுக்கும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்டார்ட்அப் சந்தை
இந்தியா உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் சந்தையாக இருக்கும் வேளையில் இத்துறைக்கான நிதியியல் சேவை மிகவும் அவசியமானதாக உள்ளது என ஐசிஐசிஐ வங்கியின் மேற்கு மற்றும் தெற்கு பிரிவின் தலைவரான ராஜேஷ் ராய் தெரிவித்துள்ளார். Startup Ecosystem Banking பிரிவுக்காக தனிப்பட்ட டீம்-ஐ உருவாக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Silicon Valley Bank கொடுத்த அச்சம்
Silicon Valley Bank உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்தாலும் அமெரிக்க அரசின் கிடைசி நிமிட உதவியால் அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய பணத்தை எவ்விதமான இழப்பும் இல்லாமல் மொத்தமாக பெற்றுள்ளது. அமெரிக்க அரசு மட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் சந்தையும் பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கும்.
100000 ஊழியர்கள்
Silicon Valley Bank விவகாரத்தில் அமெரிக்க அரசின் தலையீடு இல்லையெனில் 100000 ஊழியர்களையாவது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்திருக்கும், காரணம் சிலிக்கான் வேலி வங்கியில் சுமார் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் டெபாசிட் தொகை உள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
Silicon Valley Bank-ன் முக்கியமான சேவை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியை கையாளுவது தான், இதுமட்டும் அல்லாமல் வென்சர் பண்ட் நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு பாலமாக இருந்தது. இதனாலேயே SVB வீழ்ச்சி ஸ்டார்ட்அப் சந்தையை பெரிய அளவில் பாதித்தது.


Click it and Unblock the Notifications