ஆகஸ்ட் மாதம் முதலே பல முன்னணி வங்கிகள் தங்களுடைய பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தி அமைத்து வருகின்றன. சிறு முதலீட்டாளர்களுக்கு முதலில் தோன்றும் முதலீட்டு விருப்பம் என்றால் அது FD-கள் தான். அது என்னவோ FD திட்டங்கள் பிற திட்டங்களைக் காட்டிலும் சற்று முன்னிலை வகிக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் அவ்வப்போது வங்கிகள் குறுகிய கால FD திட்டத்தை அறிமுகம் செய்வதும், வட்டி விகிதங்களை மாற்றி அமைப்பதும், முதலீட்டாளர்களுக்கு ஏதுவாக மாறிவிட்டது. அந்த வகையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியும் FD திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. அதன் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட்களுக்கான (FD) வட்டி விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் (bps) அதிகரித்துள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஐசிஐசிஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் ரூ. 3 கோடி வரையிலான FD-களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ பேங்க், மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகிறது.
FD-களுக்கான ICICI வங்கியின் புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதம்:
ஐசிஐசிஐ வங்கி தனது FD வட்டி விகிதத்தை 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கு 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அதிகபட்சமாக 7.25 சதவீதம் வரை இந்த வங்கியில் வட்டி வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே வழங்கப்பட்ட 7.20 சதவீதத்திலிருந்து அதிகமாகும்.
முன்பு இந்த வங்கியில் 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கு 7.20 சதவீத வட்டி வழங்கப்பட்டது. தற்போது இந்த விகிதம் 7.25 சதவீதமாக வங்கி உயர்த்தியுள்ளது.
2 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட FD திட்டத்திற்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வுகாலம் கொண்ட FD-களுக்கு 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
ஐசிஐசிஐ பேங்க் 7 முதல் 29 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-களுக்கு 3 சதவீத வட்டியை வழங்குகிறது. 30 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 46 முதல் 60 நாட்களில் முதிர்ச்சியடையும் FD-களுக்கு 4.25 சதவீத வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ பேங்க் வழங்குகிறது.
61 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-கள் 4.5 சதவீத வட்டி விகிதத்தைப் பெறும். 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையிலான FD-கள் 4.75 சதவீத வட்டியை வழங்கும். 185 முதல் 270 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-களுக்கு 5.75 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும். 271 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக முதிர்ச்சியடையும் FD-களுக்கு 6 சதவீத வட்டி கிடைக்கும். 1 வருடம் அல்லது 15 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FD-களுக்கு 6.7 சதவீத வட்டி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications