FD திட்ட வட்டி விகிதங்களில் மாற்றம் செய்த ICICI பேங்க்.. மூத்த குடிமக்களுக்கு லட்டு மாதிரி வாய்ப்பு!

ஜூன் 29ஆம் தேதி முதல், ICICI பேங்க் நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது. தற்பொழுது ICICI பேங்க் பொது மக்களுக்கு 7.2 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவிகிதம் என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது FD பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது. இந்தப் பதிவில் திருத்தம் செய்யப்பட்ட FD வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.

பொது மக்களுக்கு, ICICI பேங்க் 7 முதல் 29 நாட்களுக்கான, ரூ. 3 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு 3 சதவீதமும், 30 முதல் 45 நாட்களுக்கான டெபாசிட்களுக்கு 3.5 சதவீதமும் வட்டி வழங்குகிறது. அதே போல 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 7.2 சதவீதம் வழங்கப்படுகிறது. 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு, ஆண்டுக்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

FD திட்ட வட்டி விகிதங்களில் மாற்றம் செய்த ICICI பேங்க்.. மூத்த குடிமக்களுக்கு லட்டு மாதிரி வாய்ப்பு!

மூத்த குடிமக்களுக்கு, 7 முதல் 29 நாட்களுக்கான, ரூ. 3 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு 3.5 சதவீதமும், 30 முதல் 45 நாட்களுக்கான டெபாசிட்களுக்கு 4 சதவீதமும் வட்டி வழங்குகிறது. அதே போல 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான முதிர்வு காலம் கொண்ட FD திட்டத்திற்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 7.75 சதவீதம் வழங்கப்படுகிறது. 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு, ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

1 ஆண்டு முதல் 15 மாதங்களுக்கும் குறைவான முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீதமும். 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களுக்கு 7.7 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

ICICI பேங்க் இணையதளத்தின்படி, மேலே கொடுக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட FD-களுக்கு பொருந்தும்.

முன்கூட்டியே FD திட்டத்தில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெற்றால் வட்டி எதுவும் செலுத்தப்படாது. 1 வருடத்திற்குள் தொகையை திரும்பப் பெற்றால் 0.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் FD திட்டங்களில் முதலீடு செய்த தொகையை திரும்ப பெற்றால் 1 சதவீத அபராதம் விதிக்கப்படும். மேலும் உங்களுடைய FD முதலீடு ரூ. 5 கோடிக்கு அதிகமாக இருந்தால் 1.5 சதவீத அபராதம் விதிக்கப்படலாம்.

PPF மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள்:

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) தற்போது 7.1 சதவீத வட்டி வழங்குகிறது, இது பொது மக்களுக்கு ICICI பேங்க் வழங்கம் FD திட்டத்தின் அதிகபட்ச வட்டி விகிதமான 7.2 சதவீதத்தை விட குறைவாக உள்ளது. இருப்பினும், PPF வட்டி விகிதம் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு அதிகமாக இருக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 8.2 சதவீதத்தை வழங்குகிறது, இது ICICI பேங்க் வழங்கும் அதிகபட்ச FD திட்ட வட்டி விகிதமான 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான 7.75 சதவீதத்தை விட அதிகமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+