சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு அனைத்து வங்கிகளும் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதை பார்த்தோம்.
அதேபோல் ஐசிஐசிஐ வங்கியும் ரூபாய் 2 கோடி வரை பிக்சட் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை சமீபத்தில் உயர்த்தியது.
இந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் ஜூலை 11 முதல் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ரெப்போ
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் மற்றும் 50 புள்ளிகள் என அடுத்தடுத்து 90 புள்ளிகள் வரை உயர்த்தியது. இதனை அடுத்து அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தின என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ஐசிஐசிஐ வங்கி
அந்த வகையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதம் ரூபாய் 2 கோடி வரை பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்த நிலையில் தற்போது 2 கோடிக்கு மேல் 5 கோடி வரை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
பிக்சட் டெபாசிட்
இந்த வட்டி விகித உயர்வு பிக்சட் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை, மியூட்சுவல் பண்ட் உள்பட பல்வேறு முதலீடுகளில் ரிஸ்க் இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் தற்போது வட்டி உயர்ந்துள்ளதால் பிக்சட் டெபாசிட்டில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர்.
புதிய வட்டி விகிதம்
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, 2 கோடிக்கு மேல் 5 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு புதிய வட்டி விகிதங்களை ஜூலை 11 முதல் மாற்றியுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
7 - 14 நாட்கள் வரை: 3.10 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு - 3.10 சதவீதம்
15 - 29 நாட்கள் வரை: 3.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.10 சதவீதம்
30 - 45 நாட்கள் வரை: 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்
46 - 60 நாட்கள் வரை: 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
61 - 90 நாட்கள் வரை: 4.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
91 - 120 நாட்கள் வரை: 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்
121 - 150 நாட்கள் வரை: 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்
151 - 184 நாட்கள் வரை: 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்
185 - 210 நாட்கள் வரை: 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
211 - 270 நாட்கள் வரை: 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
271 - 289 நாட்கள் வரை: 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.35 சதவீதம்
290 - 1 வருடம் வரை: 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.35 சதவீதம்
1 - 389 நாட்கள் வரை: 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம்
390 - 15 மாதங்கள் வரை: 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்
18 - 2 ஆண்டுகள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்
மூத்த குடிமக்கள்
ரூ.2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களை விட 0.50 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்ட நிலையில் ரூ.2 கோடிக்கு மேல் பிக்சட் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு உரிய வட்டி விகிதமே அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications