இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40 சதவீதமாக அறிவித்தது. எனவே வங்கி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் உயரும் என தமிழ் குட்ரிட்டர்ன்ஸில் தெரிவித்து இருந்தோம்.
அதை உறுதி செய்யும் விதமாக ஐசிஐசிஐ வங்கி தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
எவ்வளவு உயர்வு?
ஆர்பிஐ 0.40 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தாலும், அந்த நன்மையை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் 0.25 சதவீதம் மட்டும் ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.
எப்போது முதல்?
ஐசிஐசிஐ வங்கியின் இந்த பிக்சட் டெபாசிட் வட்டி விகித உயர்வு மே 5-ம் தேதி முதலே அமலுக்கு வருகிறது. எனவே இன்று முதல் ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.
பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம்:
7 - 14 நாட்கள் : 2.75%
15 - 29 நாட்கள் : 2.75%
30 - 45 நாட்கள் : 3.00%
46 - 60 நாட்கள் : 3.00%
61 - 90 நாட்கள் : 3.25%
91 - 120 நாட்கள் : 3.50%
121 - 150 நாட்கள் : 3.50%
151 - 184 நாட்கள் : 3.50%
185 - 210 நாட்கள் : 3.75%
211 - 270 நாட்கள் : 3.75%
271 - 289 நாட்கள் : 4.00%
1 ஆண்டு - 389 நாட்கள் : 4.50%
390 நாட்கள் - 15 மாதம் : 4.50%
15 மாதம் - 18 மாதம் : 4.60%
18 மாதம் - 2ஆண்டு : 4.65%
2 ஆண்டு 1 நாள் - 3 ஆண்டு : 4.75%
3 ஆண்டு 1 நாள் - 5 ஆண்டு : 4.80%
5 ஆண்டு 1 நாள் - 10 ஆண்டு : 4.80%
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்:
7 - 14 நாட்கள் : 2.75%
15 - 29 நாட்கள் : 2.75%
30 - 45 நாட்கள் : 3.00%
46 - 60 நாட்கள் : 3.00%
61 - 90 நாட்கள் : 3.50%
91 - 120 நாட்கள் : 3.50%
121 - 150 நாட்கள் : 3.50%
151 - 184 நாட்கள் : 3.50%
185 - 210 நாட்கள் : 3.75%
211 - 270 நாட்கள் : 3.75%
271 - 289 நாட்கள் : 4.00%
1 ஆண்டு - 389 நாட்கள் : 4.50%
390 நாட்கள் - 15 மாதம் : 4.50%
15 மாதம் - 18 மாதம் : 4.60%
18 மாதம் - 2ஆண்டு : 4.65%
2 ஆண்டு 1 நாள் - 3 ஆண்டு : 4.75%
3 ஆண்டு 1 நாள் - 5 ஆண்டு : 4.80%
5 ஆண்டு 1 நாள் - 10 ஆண்டு : 4.80%
குறைந்த கால டெபாசிட்
ரெப்போ வட்டி விகிதம் உயரும் போது, பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயருகிறது என்றால் குறைந்த கால டெபாசிட் திட்டங்களுக்குத் தான் முதலில் மாறும். எனவே புதிதாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்ய இருப்பவர்கள், பழைய டெபாசிட்டை புதுப்பிக்க இருப்பவர்கள் குறைந்த கால முதலீட்டைத் தேர்வு செய்வது நல்லது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications