சென்னை: இந்தியாவில் UPI பயன்பாடு அதிகரித்துள்ளது. வங்கிக்கு சென்று பணப்பரிவர்த்தனை செய்வதை விட, UPI மூலம் பரிவர்த்தனை செய்வது எளிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதன் பொருட்டு ICICI பேங்க், NRI வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்புவதை மேம்படுத்த ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
NRI வாடிக்கையாளர்கள் தங்களுடைய சர்வதேச மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, இந்தியாவில் உடனடியாக UPI மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியை ICICI பேங்க் அறிமுகம் செய்துள்ளது.

ICICI பேங்கில் உள்ள NRI வாடிக்கையாளர்கள், தங்களுடைய NRE/NRO வங்கிக் கணக்குடன், இணைக்கப்பட்ட சர்வதேச மொபைல் எண்ணைப் பயன்படுத்தித் தங்களின் யூடிலிட்டி பில்களை எளிதாக செலுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல், வணிகர்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களில் இருந்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திப் பொருட்களை வாங்கலாம். இந்தச் சேவையை ICICI வங்கியின் iMobile Pay செயலி மூலம் பெற முடியும். பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் UPI பயன்படுத்துவதை எளிதாக்குவதற்காக, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி 10 நாடுகளில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ICICI பேங்க் அமெரிக்கா, இங்கிலாந்து, யுஏஇ, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய 10 நாடுகளில் இந்த வசதியை வழங்கி வருகிறது.
இதன் மூலம் NRI வாடிக்கையாளர்கள், இந்தியாவில் உள்ள QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். மேலும் இந்தியாவில் உள்ள UPI ஐடி, மொபைல் நம்பர் மற்றும் வங்கிக் கணக்கிற்கும் பணம் அனுப்பலாம்.
இது குறித்து பேசிய ICICI பேங்கின், டிஜிட்டல் சேனல்கள் மற்றும் பார்ட்னர்ஷிப்களின் தலைவர் சித்தாராத மிஸ்ரா, " iMobile Pay செயலி மூலம் சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தி UPI அம்சத்தை அறிமுகப்படுத்த, NPCI உடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம். 10 நாடுகளில் உள்ள எங்கள் NRI வாடிக்கையாளர்கள் இப்போது இந்திய மொபைல் எண்ணுக்கு மாறாமல் UPI பயன்படுத்தலாம். மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
NRIகள் UPI வசதியைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்:
ஸ்டெப் 1: iMobile Pay ஆப்-இல் லாகின் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: அதன் பின் 'UPI Payments' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: தற்போது மொபைல் எண்ணைக் கொடுத்து வெரிஃபை செய்யவும்.
.
ஸ்டெப் 4: 'Manage' என்பதைக் கிளிக் செய்து, 'My Profile' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: இப்போது கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களில் இருந்து புதிய UPI ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 6: அக்கவுண்ட் நம்பரை கொடுத்து சப்மிட் செய்யவும்.


Click it and Unblock the Notifications