சென்னை: நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு.. யாருக்கு ஏற்றது.. எப்படி வாங்குவது?
சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதனை இன்று முதலமைச்சர் கே பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பணப் பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில், இந்த நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு பயன்பாடு
இந்த நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு அட்டையை மாநகராட்சியின் சேவைகள், வாகன நிறுத்தக் கட்டணம், நாடு முழுவதும் ரூபே அட்டை வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் உணவகங்கள், கடைகள், சில்லறை வணிகம் சார்ந்த இடங்கள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் விற்பனையகங்களில் பயன்படுத்தலாம்.
இந்த சேவைகளையும் பெற முடியும்
அதோடு இந்த அட்டை மூலம் வரி செலுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளுக்காகவும் பயன்படுத்த முடியும். இதோடு மூவி டிக்கெட்டுகள், இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்தலாம். ஆன்லைன் உணவு டெலிவரிக்காகவும் பயன்படுத்த முடியும். மொத்தத்தில் ஒரு டெபிட் கார்டினை போல இந்த அட்டையை பல்வேறு சேவைகளுக்காக பயன்படுத்த முடியும்.
இணைய தளம்
இதனை வாடிக்கையாளர்கள் வரவிருக்கும் காலத்தில் ஐஸ்மார்ட் சிட்டி யுபிஐ ஆப் மூலமாகவும் இந்த, அட்டையை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தலாம். இதற்காக https://smartcity.icicibank.com/customer/customerportal?pagename=namma என்ற இணையத்தினையும் கொடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் அட்டையில் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் பெறுவார்கள். இது வரவிருக்கும் நாட்களில் வங்கியின் இணையதளத்தில் பெறலாம்.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலை
இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது 4.02% அதிகரித்து 641.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 645 ரூபாயாகும். இதே இன்று அதிகபட்சமாக 615.10 ரூபாயாக உள்ளது.
உண்மையில் ஐசிஐசிஐ வங்கியின் இந்த ஸ்மார்ட் கார்டு சேவையானது மிக பயனுள்ள ஒரு நல்ல விஷயம் தான்.


Click it and Unblock the Notifications