ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகச் சந்தா கோச்சார் இருந்த காலகட்டமான 2012ல் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வீடியோகான் குழுமத்திற்குச் சுமார் 3250 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்துள்ளது.
இந்தக் கடன் வழங்கியதில் பெரும் மோசடி செய்யப்பட்டது தற்போது சிபிஐ விசாரணையில் வெளியாகி இந்த வழக்கில் தொடர்புடையவர்களான சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழுமத்தின் சிஇஓ வேணுகோபால் தூத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சந்தா கோச்சார் கைது வெறும் ஆரம்பப் புள்ளி தான், இதற்குப் பின்னால் பெரிய கூட்டமே உள்ளது என அரவிந்த் குப்தா தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வீடியோகான் குழுமத்திற்குச் சுமார் 3250 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்ததில் பெரும் மோசடி நிகழ்ந்துள்ளது உறுதியான நிலையில் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ.
3250 கோடி ரூபாய் கடன்
இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கி கொடுத்த 3250 கோடி ரூபாய் கடன் மோசடிகள் நடந்துள்ளது என முதன் முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் தான் அரவிந்த் குப்தா. இந்த நிலையில் அரவிந்த் குப்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் சந்தா கோச்சார் கைது நடவடிக்கை எல்லாம் ஒரு பெரிய பணி பாறையில் ஒரு முனை மட்டுமே என்று எச்சரித்துள்ளார்.
சிபிஐ அமைப்பு
இந்த 3250 கோடி ரூபாய் ஊழலில் உண்மையான பயனாளிகளின் பங்கு மற்றும் வீடியோகான் நிறுவனத்திற்குக் கடனை அனுமதித்தவர்கள் ஆகியோரின் பங்கு ஆகியவற்றைச் சிபிஐ அமைப்பு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று அரவிந்த் குப்தா கூறினார்.
வேணுகோபால் தூத்
இதுதவிர, வீடியோகான் குழுமத்தின் சிஇஓ வேணுகோபால் தூத் மற்றும் சந்தா கோச்சார்-ன் கணவர் தீபக் கோச்சாரால் நிறுவப்பட்ட NuPower Renewables நிறுவனம் குறித்தும் அரவிந்த் குப்தா பல கேள்விகளை எழுப்பினார்.
அதிகாரிகள் குழு
விசாரணையில் சந்தா கோச்சாரின் அதிகாரிகள் குழு இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இப்போது நடந்திருப்பது ஆரம்பக்கட்ட மற்றும் முதல்கட்ட கண்டுபிடிப்புகள் தான். தற்போது உண்மையான பிரச்சினை ஐசிஐசிஐ வங்கியின் மூத்த நிர்வாகக் குழு. அவர்களின் பங்கு விரிவாக ஆராயப்படவில்லை என்பது தான் முக்கியமான பிரச்சனை.
ஐசிஐசிஐ வங்கி நிர்வாக
இந்தக் கடன் மோசடி வெளியான போது ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகக் குழு சந்தா கோச்சார்-ஐ பாதுகாத்து வந்தது, நிர்வாகமும் ஒன்றும் தவறாக நடக்கவில்லை என சப்போர்ட் செய்தது. மேலும் வீடியோகான் நிறுவனத்திற்கான கடன் ஒப்புதல் அளித்தது கிரெடிட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் குழு மற்றும் கிரெடிட் கமிட்டி தான் என விளக்கம் கொடுத்தது.
கிரெடிட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் குழு
இதேவேளையில் சந்தா கோச்சார் தனது வாக்குமூலத்தில் இந்தக் கடனை நான் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளார், இதனால் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் குழு மற்றும் கிரெடிட் கமிட்டி அதிகாரிகளைச் சிபிஐ விசாரிக்க வேண்டும்.
நுபவர்
3250 கோடி ரூபாய் கடன் மோசடியில் மிகவும் முக்கியமானது நுபவர். இது தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோர் இணைந்து உருவாக்கப்பட்டது. ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஏன் ஒரு வங்கியாளரின் கணவருடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும்? பின்னர் முழு நிறுவனத்தையும் ஏன் சந்தா கோச்சாரின் கணவரிடமே ஒப்படைக்க வேண்டும்.
அரவிந்த் குப்தா
சிபிஐ சரியாக விசாரித்தால் நுபவர் வங்கி மோசடி பணத்தில் இந்தியா முழுக்க முதலீடு செய்து பெரிய மோசடி செய்திருக்கலாம். எனவே தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் இணைந்து உருவாக்கிய நுபவர் ஒரு Pandora's box ஆக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோரின் கைது வெறும் ஆரம்பப் புள்ளி மட்டுமே என அரவிந்த் குப்தா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications