இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளைச் சனிக்கிழமை வெளியிட்டது. சில நாட்களுக்கு முன்பு ஹெச்டிஎப்சி வங்கியின் காலாண்டு முடிவுகள் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் பங்குச்சந்தையில் ஏற்படுத்தியது மறக்க முடியாது.
இந்த நிலையில் சனிக்கிழமை சிறப்பு வர்த்தக நாளில் ஐசிஐசிஐ வங்கி தனது காலாண்டு முடிவுகளை வர்த்தக நேரம் முடிந்த பின்பு வெளியிட்டு உள்ளது. ஐசிஐசிஐ வங்கி டிசம்பர் காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபமாக 10,272 கோடியைப் பெற்றுள்ளது.

இது கடந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டு லாபத்தை ஒப்பிடும் போது தற்போது 23.6% சதவீத வளர்ச்சியில் கூடுதல் லாபத்தைப் பெற்றுள்ளது. சிறப்பு வர்த்தக நாளான இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிந்தாலும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் உயர்வுடன் உள்ளது.
டிசம்பர் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.16,465 கோடியாக இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 13.4% வளர்ச்சியுடன் 18,678 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வரம்பு (Net Interest Margin) டிசம்பர் காலாண்டில் 4.43% ஆக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 4.53% ஆகவும், 2023 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 4.65% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் காலாண்டின் முடிவில் ஐசிஐசிஐ வங்கியின் மொத்த டெபாசிட் தொகை 18.7% அதிகரித்து ரூ.13,32,315 கோடியாகவும், உள்நாட்டுக் கடன் போர்ட்ஃபோலியோ 18.8% வருடாந்திர வளர்ச்சியுடன் ரூ.11,14,820 கோடியாகவும் உள்ளது.
மேலும் ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் டிசம்பர் 31, 2023 இல் 0.44% ஆக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 0.43% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது, அதே நேரத்தில் செயல்படாத சொத்துகளின் மீதான கவரேஜ் விகிதம் 80.7% ஆக உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.92 சதவீதம் உயர்ந்து 1008.30 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications