முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி கடந்த டிசம்பர் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம், 34.2% அதிகரித்து, 8,312 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே வாராக்கடன் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 0.55% ஆக குறைந்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 0.61% ஆக இருந்தது.
நிகர வட்டி வருவாய் விகிதமானது 34.6% அதிகரித்து, 16,465 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர வட்டி மார்ஜின் விகிதமானது, 4.65% ஆக டிசம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 3.96% ஆக இருந்தது. இதே இரண்டாவது காலாண்டில் 4.31% ஆக இருந்தது.
டெபாசிட் வளர்ச்சி
இதே டெபாசிட் வளர்ச்சி விகிதமானது 10.3% அதிகரித்து, 11,22,049 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் கடன் வளர்ச்சியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 19.7% ஆக அதிகரித்துள்ளது. புரவீசன்ஸ் (வரி தவிர) விகிதம் 12.5% அதிகரித்து, 2257 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
செயல்பாட்டு லாபம்
முக்கிய செயல்பாட்டு லாபமானது 31.6% வளர்ச்சியானது அதிகரித்து, 13,235 கோடி ரூபாயாக டிசம்பர் காலாண்டில் (1.6 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது.
மொத்த டெபாசிட் வளர்ச்சியானது கடந்த ஆண்டினை காட்டிலும் டிசம்பர் காலாண்டில், 10.3% அதிகரித்து, 11,22,049 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
காசா விகிதம்
இதே நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு (CASA) விகிதமானது, மூன்றாம் காலாண்டில், 44.6% ஆக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 19.7% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு கடன் வளர்ச்சி விகிதமானது, 21.4% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
கடன் அதிகரிப்பு
சில்லறை மற்றும் கிராமப் புறம், வணிக கடன், எஸ் எம் இ பிரிவுகளில் கட்டணம் 78% ஆக அதிகரித்துள்ளது. கருவூல லாப விகிதம் மூன்றாவது காலாண்டில் 36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மார்ஜின் விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இதுவரை இல்லாத உச்சத்தினை 5.47% ஆக எட்டியுள்ளது.
கோடக் வங்கி
கோடக் வங்கியின் மார்ஜின் விகிதமானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சமானது, 5.47% ஆக எட்டியுள்ளது. இதே இத நிகர வருவாய் விகிதமானது 31% அதிகரித்து, 2,792 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் நிகர லாபமானது 2131 கோடி ரூபாயாக இருந்தது.
பஞ்சாப் & சிந்த் வங்கி
அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்த் வங்கி 24% அதிகரித்து, 373 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இதே நிகர வட்டி வருவாய் வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. இதே மோசமான கடன் விகிதமும் சரிவினைக் கண்டுள்ளது.
இதே கடந்த ஆண்டு 301 கோடி ரூபாயாக இருந்தது. இதே மொத்த வருவாய் விகிதமானது, 2245 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 2,042 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி நிகர லாபம் டிசம்ப காலாண்டில் இருமடங்கு அதிகரித்து, 605 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேசெயல்பாட்டு வருவாய் விகிதமானது 281 கோடி ரூபாயாக இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications