வேலியே பயிரை மேய்ந்த கதை –வாடிக்கையாளர் கணக்கில் இருந்த ரூ.4.58 கோடியை திருடிய Relationship Manager!

அண்மைக்காலமாக வங்கிகளில் செயல்படக்கூடிய ஊழியர்களே பல்வேறு மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. தனியார் வங்கிகள் அனைத்தும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக ரிலேஷன்ஷிப் மேனேஜர் (Relationship Manager) என்ற ஒரு பொறுப்பில் ஆட்களை நியமனம் செய்கின்றன.

ரிலேஷன்ஷிப் மேனேஜர் பொறுப்பில் இருப்பவர்கள் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே பாலமாக செயல்படுவார், வாடிக்கையாளருக்கு தேவையான அனைத்து வங்கி சேவைகளையும் பெற்று தரும் நபராக இருப்பார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றி வந்த ரிலேஷன்ஷிப் மேனேஜர் ஒருவர் தனக்கு உட்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி 4.58 கோடி ரூபாயை திருநீறுப்பது தெரிய வந்துள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதை –வாடிக்கையாளர் கணக்கில் இருந்த ரூ.4.58 கோடியை திருடிய Relationship Manager!

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கே இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் கொடா பகுதியில் செயல்பட்டு வருகிறது ஐசிஐசிஐ வங்கி கிளை. இங்கு ரிலேஷன்ஷிப் மேனேஜராக இருந்த ஒரு பெண் தனக்கு வழங்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து 4.58 கோடி ரூபாயை கொள்ளையடித்து இருக்கிறார். சாக்சி குப்தா என பெயரிடப்பட்ட அவர் சுமார் 110 வங்கி கணக்குகளில் இருந்து 2020ல் இருந்து 2023 வரையிலான காலகட்டத்தில் 4.58 கோடி ரூபாய் வரை திருடி இருக்கிறார்.

வாடிக்கையாளர் ஒருவர் வங்கியில் இருந்து எஃப்டி கணக்கை முடிக்க வந்த போது தன்னுடைய கணக்கில் பணமில்லாததை கண்டறிந்தார். இதனை அடுத்து சாக்சி குப்தா மீது சந்தேகம் எழுந்தது. அவர் பராமரித்து வந்த வங்கி கணக்குகளில், கணக்குகள் முறையாக வராததால் வங்கி மேலாளர் தருண் தணிக்கைக்கு உத்தரவிட்டிருக்கிறார். தணிக்கையின் போது தான் சாக்சி குப்தா பல்வேறு வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டதாம். இதனை அடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டடு சாக்சி குப்தாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நன்றாக திட்டமிட்டு சாக்சி குப்தா இந்த மோசடியை நிகழ்த்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. தனக்கு வழங்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய அலைபேசி எண்களை அவர்களின் அனுமதி இல்லாமல் இவரே மாற்றி இருக்கிறார் இதன் மூலம் அவர்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து இருக்கிறார். அதாவது ஓடிபி சென்றால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதற்காக இப்படி செய்தாராம்.

இப்படி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து தன்னுடைய கணக்கிற்கு மாற்றி இருக்கிறார்.இவர் பெரும்பாலும் மூத்த குடிமக்களின் வங்கி கணக்கில் இருந்து தான் பணத்தை எடுத்து இருக்கிறார். அவர்களிடம் சாமர்த்தியமாக பேசி ஓடிபி உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றி இருக்கிறார். மேலும் 31 வாடிக்கையாளர்களின் எஃப்டி கணக்கை அவர்களுக்கு தெரியாமல் முன்கூட்டியே இவரே முடித்து அந்த பணத்தையும் கொள்ளை அடித்துள்ளார்.

இரண்டு ஆண்டு காலம் யாருக்கும் சந்தேகமே வராத வகையில் அவர் இவ்வாறு சிறு சிறுக பணத்தை எடுத்திருக்கிறார். இப்படி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பெற்ற பணத்தை அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தாராம். ஆனால் அந்த பணத்தை முழுமையாக இழந்து இப்போது காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+