ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..!

தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கி செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டு காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக இவ்வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், கடந்த செப்டம்பர் காலாண்டில் 4,251.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் வெறும் 655 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..!

இவ்வங்கியில் மொத்த டெபாசிட் விகிதம் 20 சதவீதம் அதிகரித்து 8,32,936 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கரண்ட் அக்கவுண்ட் மற்றும் சேமிப்பு கணக்குகளின் டெபாசிட் சராசரி விகிதம் 17% வளர்ச்சி கண்டுள்ளது. இதே டெர்ம் டெபாசிட்களின் விகிதம் 26% வளர்ச்சி கண்டுள்ளது.

இதே உள்நாட்டு கடன்களின் மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10% அதிகரித்தும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 4% அதிகரித்தும் காணப்படுகிறது. இதே சில்லறை கடன்களின் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 13% அதிகரித்தும், இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 6% அதிகரித்தும் காணப்படுகிறது.

இதே செயல்படாத சொத்துகளின் மதிப்பு (வாராக்கடன்) 1.23%ல் இருந்து 1% ஆக குறைந்துள்ளது. செயல்படாத சொத்துகளின் மதிப்பானது 38,989 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 45,638 கோடி ரூபாயாக இருந்தது. இதே மொத்த வாரக்கடனின் மதிப்பானது செப்டம்பர் காலாண்டில் 5.17% ஆகவும், இதே கடந்த காலாண்டில் 6.37% ஆகவும் இருந்தது. எனினும் இந்த காலாண்டில் வங்கி மோசமான கடன்கள் என 3,017 கோடி ரூபாயினை மதிப்பிட்டுள்ளது.

இதன் நிகர வட்டி வருவாய், அதாவது அதன் கடன் நடவடிக்கைகளில் இருந்து சம்பாதிக்கும் வட்டி வருமானத்திற்கும், வைப்பு தொகையாளர்களுக்கு வங்கி செலுத்தும் வட்டிக்கும், உள்ள வித்தியாசம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 16 சதவீதம் அதிகரித்து, 9,366 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர வட்டி மார்ஜின் தொகையானது 3.57 சதவீதமாகவும் இருந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று இந்த வங்கியின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 1.84% குறைந்து 392.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+