தற்போது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாத நபர்களை பார்ப்பதற்கு அரிதாக உள்ளது. அவசர காலத்திற்கு உதவும் முக்கிய கருவியாக கிரெடிட் கார்டுகள் மாறிவிட்டன. ஐசிஐசிஐ பேங்க், HDFC பேங்க் போன்ற பல்வேறு முன்னணி வங்கிகளும் கிரெடிட் கார்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேங்க் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.
எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: புதிய விதிகளின்படி எரிபொருள் பரிவர்த்தனை தொகை 50,000 ரூபாய்க்கு மேலிருந்தால், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையில் ரூ.1 சதவீதத்தை வங்கி வசூலிக்கும்.

கல்வி தொடர்பான பேமெண்ட்கள்: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரி அல்லது சர்வதேச கட்டணத்தை செலுத்தும் போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன் மூலம் பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
யூட்டிலிட்டி பேமெண்ட்களுக்கான கட்டணம்: ரூ.50,000-த்திற்கு மேல் செய்யப்படும் யூட்டிலிட்டி பேமண்டுகளுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையில் 1 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
எரிபொருள்களுக்கான கூடுதல் கட்டணம்: எரிபொருளுக்கான பரிவர்த்தனைகளை செய்யும்போது பரிவர்த்தனை மதிப்பில் 1 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். இருப்பினும் எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் அமேசான் பே கார்டை பயன்படுத்தினால் இந்த கூடுதல் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
வாடகை செலவு: ஐசிஐசிஐ பேங்கின் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் வாடகை பேமெண்ட்களுக்கு 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
வட்டி: கிரெடிட் கார்டுகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தாவிட்டில் வட்டி விதிக்கப்படும். முந்தைய நிலுவைத் தொகைகள் முழுமையாக செலுத்தப்படும் வரை மொத்த தொகை மற்றும் அனைத்து புதிய பரிவர்த்தனைகளின் மீதும் வட்டி கணக்கிடப்படும்.
ஒருவேளை வட்டி கட்ட தவறினால் அதிகபட்சமாக மாதத்திற்கு 3.8 சதவீதம் வரை வட்டி விகிதம் நீட்டிக்கப்படலாம். இந்த வட்டி விகிதத்தில் பார்க்கும்போது ஆண்டுக்கு 46 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே கிரெடிட் கார்டு பெற்றவர்கள் புதிய கட்டணங்களின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு, சரியாக பில் செலுத்தும் பட்சத்தில் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்கலாம்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications