ஐசிஐசிஐ- வீடியோகான் மோசடி: சந்தா கோச்சார்-க்குப் பெயில் கிடைத்தது.. வெளிநாடு செல்ல தடை..!

ஐசிஐசிஐ வங்கி மற்றும் வீடியோகான் மோசடியில் ஈடுபட்டு உள்ள ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்தா கோச்சார்-க்கு PMLA நீதிமன்றம் 5 லட்சம் உத்தரவாதம் மற்றும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்ற முக்கியக் கட்டுப்பாடுகள் உடன் பெயில் அளித்துள்ளது.

வீடியோகான் மோசடி வழக்கு விசாரணை இன்று PMLA நீதிமன்றத்தில் நடந்த நிலையில், சந்தா கோச்சார் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக் கட்டுப்பாடுகளுடன் பெயில் வழங்கப்பட்டது.

அமலாக்க துறை வழக்கு

அமலாக்க துறை வழக்கு

பிப்ரவரி 2019ல் அமலாக்க துறை ஜசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகத் தலைவர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குரூப் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது பணச் சலவை உட்படக் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் படி ஐசிஐசிஐ வங்கி வாயிலாக முறைகேடாகச் சுமார் 1,875 கோடி ரூபாய் அளவிலான தொகையை வீடியோகான் குழும நிறுவனங்களுக்குக் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

சந்தா கோச்சார்-க்குப் பெயில்

சந்தா கோச்சார்-க்குப் பெயில்

இந்த மாதத்தின் துவக்கத்தில் பணச் சலவை மற்றும் மோசடி வழக்கின் கீழ் சந்தா கோச்சார்-ஐ விசாரணை செய்யப் போதுமான ஆவணங்களை அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ளதாக PMLA நீதிமன்றத்தின் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பெயில் அளிக்கப்பட்டு உள்ளது.

3 பேர் மீது வழக்கு

3 பேர் மீது வழக்கு

பணச் சலவையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் ஜனவரி 30ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையின் படி ஜசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகத் தலைவர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குரூப் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு நீதிமன்றம் சமன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

குற்றங்கள் உறுதி செய்யப்பட்டது

குற்றங்கள் உறுதி செய்யப்பட்டது

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த ஏ ஏ Nandgoankar, சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள், குற்றப்பத்திரிக்கை, அறிக்கைகள் அடிப்படையில் சந்தா கோச்சார் ஜசிஐசிஐ வங்கியில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வீடியோகான் குரூப் நிறுவனங்களுக்கும், இந்நிறுவன தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கும் கடன் அளித்துள்ளது நிரூபணமாகியுள்ளது. மேலும் 3 வரையும் பிப்ரவரி 12 நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+