ரூ. 20,000 கிரெடிட்டட் டூ a/c XXXXXXXXX.. இதை மட்டும் நம்பிடாதீங்க.. உங்க பணம் மொத்தமும் போயிடும்!

சென்னை: UPI டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் அனைவராலும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. தெருவோர வியாபாரிகள் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் என அனைவரும் பயன்படுத்தும் பொதுவான முறையாக டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் உள்ளன. UPI பணப்பரிவர்த்தனை பிரபலமாக இருப்பதனால், மோசடிகளுக்கான புதிய வழியாகவும் மாறியுள்ளது. அவற்றில் ஒன்று போலியான UPI கட்டண செய்திகளுடன் மெசேஜ் அனுப்பி கொள்ளையடிப்பது. இது போன்ற மெசேஜ் வந்தால் பாதுகாப்பாக இருப்பது குறித்து ICICI வங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

தற்போது அதிகரித்து வரும் மோசடி சம்பவங்கள் குறித்து ICICI பேங்க் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பதிவை தனது அதிகாரப்பூர்வ X ப்ளாட்பார்மில் கூறியுள்ளது. அதன்படி "தவறுதலாக UPI மூலம் பணம் செலுத்தியதாக அழைப்பாளர்கள் கூறுவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கள்.

 ரூ. 20,000 கிரெடிட்டட் டூ a/c XXXXXXXXX.. இதை மட்டும் நம்பிடாதீங்க.. உங்க பணம் மொத்தமும் போயிடும்!

பெறப்பட்ட தொகையை கவனமாக சரிபாருங்கள். உதாரணமாக, அவர்கள் உங்களுக்கு ரூ. 20,000 அனுப்பியதாகக் கூட கூறலாம். ஆனால் உண்மையில் ரூ. 200 மட்டுமே அனுப்பி இருப்பார்கள்" என்று எச்சரிக்கை அளிக்கும் பதிவை X தளத்தில் பதிவிட்டுள்ளது.

Twitter Link:

வெறும் ரூ. 200 ரூபாயை மட்டும் அனுப்பி, மோசடிக்காரர்கள் உங்களை ஏமாற்றுவதன் பின்னால் இருக்கும் யுத்தி ஒரே ஒரு புள்ளியில் தான் உள்ளது. உதாரணமாக 200.00 என்று இருந்தால் அவை பார்ப்பதற்கு ரூ. 20,000 போல தோன்றலாம். இதன் மூலமே மோசடிக்காரர்கள் தந்திரமாக பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

மேலும் பணம் தெரியாமல் அனுப்பப்பட்டது என்று யாராவது கூறினால், அவற்றை சரிபார்க்காமலேயே பலரும் தங்களுடைய அக்கவுண்டில் இருக்கும் பணத்தை பிறருக்கு அனுப்பி விடுகின்றனர். அதன் பிறகு அக்கவுண்டை சரிபார்க்கும் போது தான், பணம் குறைந்து போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதற்காகத்தான் யாரேனும் உங்களுக்கு பணம் அனுப்பி உள்ளதாகக் கூறினால், உடனே அவற்றைச் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு தான் பணம் அனுப்புவது குறித்து யோசிக்க வேண்டும். அவசரப்பட்டு பணம் அனுப்புவதால் நிதி இழப்பு அபாயங்கள் அதிகரிக்கலாம்.

உங்களை ஏமாற்ற பணம் கிரெடிட் செய்யப் பட்டதுபோல மெசேஜ் அனுப்பப் படலாம். கீழ்க்காணும் மெசேஜைப் பாருங்கள்.

"Rs 15,000 credited to a/c XXXXX9082 on 10-05-24 by a/c linked to VPA XXXX9082 (UPI Ref No 41356463189."

முதலில் உங்களுடைய டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் டெசிமல் புள்ளிகளை பயன்படுத்தி 20 ஆயிரம் அனுப்பியது போல காண்பித்து அதை உண்மை என்று நம்ப வைக்கும் விதமாக உங்களுக்கு SMS மூலம் அதேபோன்ற மெசேஜ் அனுப்பப்படும். இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்பதே வங்கிகள் மற்றும் காவல்துறையின் எச்சரிக்கையாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+