இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி வர்த்தகப் போட்டியின் காரணமாகத் தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மேம்பட்ட சேவையை அளிக்க வேண்டும் என முடிவு செய்து புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி தற்போது அறிவித்துள்ள புதிய சேவையின் பெயர் 'ICICI Bank Cardless EMI' இப்புதிய சேவையின் மூலம் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ரீடைல் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு நொடிப்பொழுதில் எவ்விதமான தடையுமின்றி மொத்த பில்லையும் ஈஎம்ஐ-யாக மாற்றிக்கொள்ள முடியும்.
அதுநாள் வரையில் ஈகாமர்ஸ் தளத்தில் மட்டுமே இருந்த சேவைகள் தற்போது ரீடைல் கடைகளிலும் வந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கும், ரீடைல் வர்த்தக நிறுவனங்களுக்கும் இது ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள்
ஐசிஐசிஐ வங்கியின் முதற்கட்டமாக இப்புதிய ‘Cardless EMI' சேவையைக் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைத் தங்களது தகுதியை அடிப்படையாகக் கொண்டு இச்சேவையைப் பெற அனுமதி அளித்துள்ளது.
அடுத்த சில மாதங்கள் அல்லது வருடத்தில் இச்சேவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
தேவையான பொருட்கள்
‘Cardless EMI' சேவை பெற்ற வாடிக்கையாளர்கள் ரீடைல் கடைகளில் தங்களுக்குப் பிடித்த பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு, பொருட்களுக்கான தொகையை மொபைல் நம்பர் மற்றும் பான் கார்டு (டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தேவையில்லை) வைத்து எளிதாக NO-Cost EMI ஆக மாற்றிக்கொள்ள முடியும்.
இதை ரீடைல் கடைகள் தங்களிடம் இருக்கும் POS இயந்திரத்தின் வாயிலாகவே செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. எனவே கிடைகளில் ஈஎம்ஐ சேவை பெற எவ்விதமான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவோ, மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் சேவையைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தேவையில்லை என்பதால் அதிகளவிலான வாடிக்கையாளர் இச்சேவையைப் பயன்படுத்தத் துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியக் கடைகளில் மட்டும்
இந்திய வங்கித் துறையில் முதல் முறையாக ஐசிஐசிஐ வங்கி முழுவதும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட ஒரு ஈஎம்ஐ சேவையை ரீடைல் கடைகளில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ஐசிஐசிஐ வங்கி பைன் லேப்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
முதற்கட்டமாக இச்சேவை பைன் லேப்ஸ் தளத்தில் இருக்கும் க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ், சங்கீதா மொபைல் ஆகிய கடைகளில் கிடைக்கும்.
முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
மேலும் ஐசிஐசிஐ வங்கியின் இப்புதிய சேவை கேரியர், டெய்கின், டெல், கோத்ரேஜ், ஹையர், ஹெச்பி, லெனோவா, மைக்ரோசாப்ட், மோட்டோரோலா, நோக்கியா, ஒப்போ, பேனாசோனிக், தோஷிபா, விவோ, வேர்ல்பூல் மற்றும் எம்ஐ (சியோமி) ஆகிய பிராண்டு பொருட்களை வாங்கும் போது கிடைக்கும் என ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது.
அதிகப் பிராண்டுகள், அதிக ரீடைல் கடைகள்
மேலும் இந்தச் சேவை அடுத்த சில மாதத்தில் பிற பிராண்டு பொருட்களும், பிற ரீடைல் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சேவை அறிமுகத்தால் கிரெடிட் கார்டு பெற வேண்டிய அவசியம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications