கல்யாணம் பண்ணி பாரு! வீட்டை கட்டி பாரு! என்று பெரியவர்கள் உதாரணத்திற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நிதி ரீதியாக திட்டமிடுவது அவசியமாகும். அதுவும் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். எப்படித்தான் செலவாகிறது என்றே தெரியாமல் செலவாகும். மண்டப செலவுகள், துணிமணி செலவுகள், நகை செலவுகள் என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி பல செலவுகள் திருமணங்களில் இருப்பதால் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.
இது போன்ற விஷயங்களை எல்லாம் கவனித்து பல வங்கிகளும் தற்போது வெட்டிங் லோன் என்று சொல்லப்படுகிற திருமணக் கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. ICICI பேங்க் பல்வேறு திருமணச் செலவுகளை சமாளிப்பதற்காக வெட்டிங் லோன்களை வழங்குகிறது.

வெட்டிங் லோன் என்றால் என்ன?: வெட்டிங் லோன் என்பது திருமணத்திற்காக பெரும் கடன்களாகும். இதுவும் ஒரு வகையான தனிநபர் கடனைப் போலத்தான் செயல்படும். இந்த வகை கடன்களை திருமணங்களில் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட தனிநபர்கள் பெறுகின்றனர்.
மண்டபம் முன்பதிவு முதல் கேட்டரிங், ஆடை என அனைத்தையும் சமாளிக்க இது போன்ற கடன்கள் உதவிகரமானதாக இருக்கும். ஐசிஐசிஐ பேங்க் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தங்களுடைய தகுதி அளவுகோலை பூர்த்தி செய்யும் பட்சத்தில் ரூ.50 லட்சம் வரையிலான பிணையம் இல்லாத திருமணக் கடன்களை வழங்குகிறது. அதற்கு நீங்கள் கீழ்காணும் 6 விஷயங்களைச் செய்ய வேண்டும்.
உங்கள் தகுதியை சரிபார்க்கவும்: உங்களுடைய வயது, மாதாந்திர வருமானம், கடனை திருப்பிச் செலுத்தும் திறன், கடன் வரலாறு, கிரெடிட் ஸ்கோர் போன்ற பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் உங்களுடைய தகுதி சரிபார்க்கப்படும்.
ஈஎம்ஐ தொகையை கவனமாக கணக்கிடுங்கள்: உங்கள் தகுதி சரிபார்க்கப்பட்டதும் கடன் விண்ணப்பத்தில் நீங்கள் விண்ணப்பித்திருக்கும் தொகைக்கான ஈஎம்ஐ தொகையை கணக்கிடுங்கள். அதற்காக ஈஎம்ஐ கால்குலேட்டர்களையும் ஐசிஐசிஐ பேங்க் வழங்குகிறது. இதில் நீங்கள் எவ்வளவு கடன் பெறுகிறீர்கள்? அதற்கான வட்டி, கடன் காலம் ஆகியவற்றை வழங்கினால் மாதம் எவ்வளவு ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பிழை இல்லாமல் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: இந்த இரண்டு விஷயங்களையும் செய்து முடித்த பிறகு ஆன்லைனில் உங்களுடைய விண்ணப்பத்தை பிழையின்றி பூர்த்தி செய்யுங்கள். எந்த விவரமும் தவறாக வழங்கப்பட்டிருக்கக் கூடாது. இந்த ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் வங்கிக் குழு உங்களை உடனடியாக தொடர்புகொள்ளும்.
ஆவணங்களை பதிவேற்றவும்: அடையாளச் சான்று, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், முகவரி சான்று, வருமானச் சான்று, கடந்த மூன்று மாதங்களுக்கான பே ஸ்லிப், வங்கி கணக்கு அறிக்கைகள் போன்ற அனைத்து ஆவணங்களையும் சமர்பியுங்கள்.
சரிபார்ப்பு மற்றும் கடன் அனுமதி: உங்கள் தரப்பிலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் செயல்முறை முடிந்த பிறகு ஐசிஐசிஐ பேங்க் உங்களுடைய தகவல்கள் மற்றும் ஆவணங்களை சரி பார்க்கும். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அப்படி இல்லை என்றால் கடன் அங்கீகரிக்கப்படும்.
கடன் வழங்கல்: கடன் அங்கீகரிக்கப்பட்டதும் விண்ணப்பத்தின் படி ரூ. 50,000 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான கடன் தொகையைப் பெற முடியும். பொதுவாக 72 மணி நேரத்திற்குள் உங்கள் கணக்கிற்கு கடன் வந்துவிடும்.
வட்டி: இந்த வகை கடன்களுக்கு ஆண்டுக்கு 10.85 சதவீத வட்டியிலிருந்து பெற முடியும். அதோடு 12 முதல் 72 மாதங்கள் வரை நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் எந்தவித அடமானமும் அல்லது உத்தரவாதமும் வழங்க தேவையில்லை. உங்களுடைய கட்டுப்பாட்டை மீறி திருமண செலவுகள் இழுத்துச் செல்லும் பட்சத்தில் இது போன்ற கடன்களைப் பெற்று திருப்பிச் செலுத்தலாம்.
ஆனால் எந்தக் கடன் பெற்றாலும் அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையின்றி கடன் பெற்று செலவு செய்யாதீர்கள். தேவை ஏற்பட்டால் மட்டும் இதுபோன்ற கடன்களை கருத்தில் கொள்ளுங்கள்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications