இந்தியாவில் உணவு சேவை மற்றும் உணவு முறையிலும் மக்கள் மத்தியில் கடந்த 15 - 20 வருடத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக வேகமாக இயங்க வேண்டி உலகில் தோசை மாவு, இட்லி மாவு கூட அரைக்க முடியாமல் தடுமாறும் பெண்களுக்கும், பேச்சலர் பசங்களுக்கு கடவுள் போல வந்தது தான் ரெடிமேட் தோசை மாவு விற்பனை.
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பாக்கெட் தோசை மாவு விற்பனை நீண்ட காலமாக இருந்தாலும், இதற்காக தனி நிறுவனம், பிராண்ட் ஆகியவற்றை உருவாக்கி பட்டதாரி இளைஞன் 10க்கு 10 ரூம்-ல் துவங்கிய பிஸ்னஸ் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான iD தோசை மாவு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

பிசி முஸ்தப்பா தலைமையிலான iD தோசை மாவு நிறுவனம் தற்போது தோசை மாவு, சப்பாத்தி, பரோட்டா, பில்டர் காஃப் டிக்காக்ஷன், மெதுவடை மாவு என பலவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த மெதுவடை மாவு என்பது மக்கள் நேரடியாக எண்ணெயில் வறுக்கும் அளவுக்கு பாக்கெட் வட்ட வட்டமாக வடை செய்யும் அளவுக்கு டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
இதை பார்த்த 12 வயது சிறுவன் மெதுவடை போடும் பாக்கெட் இருக்கும் போது ஏன் doughnut மாவு பாக்கெட் இருக்க கூடாது என தனது தாயிடம் கேட்க. 12 வயது சிறுவன் டிவிட்டரில் doughnut மாவு பாக்கெட்-ஐ டிசைனுக்கான விளக்கத்தை கொடுத்து, அது எப்படி இயங்கும் என்பது வரையில் விளக்கம் கொடுத்து iD தோசை மாவு நிறுவனத்தின் தலைவரான பிசி முஸ்தப்பா-வுக்கு வீடியோ அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோ-வை பார்த்த பிசி முஸ்தப்பா 12 வயது சிறுவனுடைய டிசைன்-ஐ ட்ரை செய்ய திட்டமிட்டு உள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதோடு அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்க்கு சல்யூட் வைத்துள்ளார் பிசி முஸ்தப்பா.
இந்த காலத்து 2K கிடஸ்-ஐ என்னதான் எல்லோரும் கலாய்த்தாலும் அவர்களுக்கு இருக்கும் திறன் முந்தைய தலைமுறைக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு 2K கிட்ஸ் அதாவது Gen Z வாடிக்கையாளர் ஒருவரை இன்டர்வியூ செய்ய நபர் இணையத்தில் புலம்பிய செய்தி வைரலானது மறக்க முடியாது.


Click it and Unblock the Notifications