IDBI வங்கி விற்பனைக்கு எதிர்ப்பு: உண்ணாவிரத போராட்டம் அறிவித்த ஊழியர்கள்!! வாடிக்கையாளர்களே கவனம்!!

கனடாவை சேர்ந்த Fairfax Financial Holdings Group நிறுவனத்திற்கு ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஐடிபிஐ ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு சொந்தமான ஐடிபிஐ வங்கியின் கணிசமான பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. இதனை அடுத்து கனடாவை சேர்ந்த Fairfax Financial Holdings Group நிறுவனம், சுமார் 50,000 கோடி ரூபாய் கொடுத்து ஐடிபிஐ வங்கியை வாங்க முன்வந்தது. மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

IDBI வங்கி விற்பனைக்கு எதிர்ப்பு: உண்ணாவிரத போராட்டம் அறிவித்த ஊழியர்கள்!! வாடிக்கையாளர்களே கவனம்!!

இந்நிலையில் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அமைப்பு மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதில் கனடாவை சேர்ந்த ஃபேர்பேக்ஸ் குழுமத்திற்கு ஐடிபிஐ வங்கியை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. மத்திய அரசு தனது பங்குகளை தக்கவைத்து கொள்ள வேண்டும், இல்லையெனில், எல்.ஐ.சி நிறுவனத்திடமிருந்தோ அல்லது திறந்த சந்தை மூலமாகவோ குறைந்தது 6 சதவீத பங்குகளை வாங்கி, வங்கியின் மீது அரசுக்கு குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Also Read

கடந்த 2003 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, வங்கியில் அரசின் பெரும்பான்மை உரிமையை அரசு தொடர்ந்து பராமரிக்க வேண்டும், வங்கி ஊழியர்களின் தற்போதைய பணிச்சூழல், நலத்திட்டங்கள், ஓய்வூதிய பலன்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு கொள்கைகள் பாதுகாக்கப்படும் வகையில் எழுத்துப்பூர்வமான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

மேலும், துறை அளவிலான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடர வேண்டும். இவற்றை அரசு ஏற்கவில்லை என்ரால் வரும் நவம்பர் 2 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி ஆகிய இரண்டும் தங்களின் பங்குகளை குறைத்துக் கொள்ளவுள்ளன. மேலும், வங்கியின் நிர்வாக கட்டுப்பாடும் ஃபேர்பேக்ஸ் குழுமத்திற்கு மாற்றப்படவுள்ளது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இரண்டு நாள் உண்ணாவுரத போராட்டத்தை தொடர்ந்து அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தங்களது போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஐடிபிஐ வங்கி செயல்பாடுகளில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை. உண்ணாவிரத போராட்ட நாட்களில் மட்டும் நேரடி வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+