IDBI வங்கியை விலைக்கு வாங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்.. சும்மா இல்ல ரூ.52,000 கோடி டீல்..!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பெரிய பரிசு கிடைத்திருக்கிறது. ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை 'ஃபேர்ஃபேக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்' (Fairfax Financial Holdings) நிறுவனம் வாங்க முன் வந்துள்ளது.

கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேர்ஃபேக்ஸ் நிதி நிறுவனம், மொத்தமாக 52,878 கோடி ரூபாயை கொடுத்து ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில், இது இந்தியாவின் நிதித்துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடாக அமையும்.

IDBI வங்கியை விலைக்கு வாங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்.. சும்மா இல்ல ரூ.52,000 கோடி டீல்..!!

இதன்படி மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி நிறுவனம் தன் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்கிறது. மத்திய அரசு தனது வசம் உள்ள 30.48% பங்குகளை விற்கிறது. எல் ஐ சி தனது வசம் உள்ள 30.24% பங்குகளை விற்கிறது. இரண்டும் சேர்த்து 60.72% பங்குகள் விற்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 52,878 கோடி ரூபாயாகும். ஒரு பங்கின் விலை 81 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் மத்திய அரசுக்கும் எல்.ஐ.சி நிறுவனத்திற்கும் மிகப்பெரிய அளவிலான நிதி வருவாய் கிடைக்கும்.

இந்த பங்குகள் விற்பனை முழுமையாக முடிந்த பிறகு, மத்திய அரசும் எல்.ஐ.சி நிறுவனமும் ஐடிபிஐ வங்கியில் சிறிய அளவிலான பங்குகளை மட்டுமே வைத்து கொள்ளும். அதாவது மத்திய அரசு 15% பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கும். எல்ஐசி 19% பங்குகளை தக்க வைத்துக் கொள்ளும். அதுமட்டுமில்லாமல் மத்திய அரசு தனது வசம் எஞ்சியுள்ள 15 % பங்குகளையும் எதிர்காலத்தில் Open Market மூலமாக விற்று வெளியேற CCEA ஒப்புதல் அளித்துள்ளது.

Also Read

மோசமான கடன் மற்றும் பலவீனமான நிதி நிலை காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஐடிபிஐ வங்கியின் மீது உடனடி திருத்த நடவடிக்கை (PCA) விதியை அமல்படுத்தியது. இதன்பின்னர் 2019இல் எல்ஐசி நிறுவனம் வங்கியின் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றி, அதன் முதன்மை பங்குதாரராக மாறியது. பின்னர் ஐடிபிஐ வங்கியை PCA விதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஆர்பிஐ விடுவித்தது. இதன் பின்னர் தான் இதனை தனியார் மயமாக்கும் பணிகள் தொடங்கின.

இதில் ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டியதில் அந்த நிறுவனத்தின் வசம் ஐடிபிஐ வங்கி செல்ல உள்ளது. ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தின் இந்த ஒப்பந்தத்திற்கு காரணமாக இருப்பவர் பிரேம் வாட்சா. இவர் இந்தியாவில் பிறந்து பின்னர் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர்.

Recommended For You

பிரேம் வாட்சா 1950 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். அவர் சென்னை ஐஐடி-யில் வேதியியல் பொறியியல் படிப்பை முடித்தார். 1972 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்த அவர், பின்னர் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ரிச்சர்ட் ஐவி வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு பிரேம் வாட்சா 'ஃபேர்ஃபேக் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு பங்குச் சந்தைகள் மற்றும் துறைகளில் முதலீடுகளை செய்து வருகிறது.

இந்தியா மீது அதிக ஈடுபாடு கொண்ட பிரேம் வாட்சா தலைமையிலான ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நிதி சேவைகள் மற்றும் பிற வணிக துறைகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. 100க்கும் அதிகமான நாடுகளீல் முதலீடு செய்துள்ள ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனம் 109.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+