இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கும் IDBI வங்கியின் பங்குகள் இன்று (ஜூலை 18-ஆம் தேதி) சுமார் 6 சதவீதம் வரையில் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை வியக்க வைத்தது. இந்த தடாலடி உயர்வின் மூலம் ஒரு பங்கு ரூ.94 வரையில் உயர்ந்து வர்த்தகமானது.
IDBI வங்கியின் பங்குகளின் தடாலடி உயர்வுக்கு முக்கியமான காரணம், இந்த வங்கியின் தனியார்மயமாக்கல் செயல்முறைக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொடுத்த ஒப்புதல் தான்.

ஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்கும் போட்டியாளர்களை ஆய்வு செய்து fit and proper அறிக்கையை வெளியிட்டது மூலம், இவ்வங்கியின் பங்கு விற்பனை அடுத்தகட்டத்திற்குச் செல்ல உள்ளது. ஆர்பிஐ மதிப்பீட்டின் மூலம், போட்டியாளர்கள் தகுதி மற்றும் பொருத்தமான அளவுகோல்களைப் பூர்த்தி செய்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
IDBI வங்கியில் மத்திய அரசு மற்றும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் (LIC) இணைந்து 94.72 சதவிகித பங்குகளை வைத்துள்ளன. இதில் LIC-க்கு 49.24 சதவிகிதம் மற்றும் அரசுக்கு 45.48 சதவிகிதம் பங்கு உள்ளது. மீதமுள்ள 5.28 சதவிகித பங்குகள் பொதுமக்களிடம் உள்ளன.
தனியார்மயமாக்கல் திட்டத்தின் கீழ், மத்திய அரசு 30.5 சதவிகித பங்குகளையும் மற்றும் LIC 30.2 சதவிகித பங்குகள் என ஐடிபிஐ வங்கியின் 60.7 சதவிகித பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
தற்போதைய சந்தை மூலதன மதிப்பு சுமார் ரூ.95,000 கோடி இருப்பதால், மத்திய அரசு இந்த தனியார்மயமாக்கல் மூலம் அதாவது 60.7 சதவீத பங்குகளை விற்பனை செய்வது மூலம் சுமார் ரூ.29,000 கோடி வரை ஈட்டக்கூடும்.
ஆர்பிஐ, ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்த அனைத்து விண்ணப்பதாரர்களின் தகுதிகளை ஆய்வு செய்து fit and proper அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் ஒரு வெளிநாட்டு உறுப்பினரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானதன் காரணமாக, IDBI வங்கியின் பங்குகள் காலை வர்த்தகம் துவங்கியது மூலம் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
காலை வர்த்தகத்தில் 6 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து ஒரு பங்கு விலை 94 ரூபாய் வரையில் உயர்ந்த ஐடிபிஐ பங்குகள் 12.45 மணிக்கு 5.82 சதவீதம் உயர்ந்து 93.04 ரூபாயாக உள்ளது. இதேவேளையில் கடந்த ஒரு வாரத்தில் 7.84 சதவீதமும், ஒரு மாதத்தில் 7.20 சதவீதமும், 2024ல் 37.72 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications