மும்பை: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான வைத்தியநாதன் தன்னுடைய தொண்டு நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர்.
இவர் ஆண்டுதோறும் தன் வசம் இருக்கும் பங்குகளை, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு வழங்கி உதவி செய்வார். அந்த வகையில் இந்த ஆண்டும் தன்னிடம் இருந்த 7 லட்சம் பங்குகளை 5 பேருக்கு வழங்கியுள்ளார்.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான வைத்தியநாதன், ஒழுங்குமுறை அமைப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், தன் வசம் வைத்திருக்கும் வங்கியின் பங்குகளை பரிசாக வழங்கியது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய 50,000 பங்குகளை சமீர் பாத்ரேவுக்கு வீடு வாங்குவதற்காக பரிசாக வழங்கியுள்ளார், அதேபோல தந்தையை இழந்த மயங்க் கோஷூக்கு 75 ஆயிரம் பங்குகளை வழங்கியுள்ளார். அதேபோல இரண்டு லட்சம் பங்குகளை ஓய்வு பெற்ற விமானப்படை வீர சம்பத்குமாருக்கு வழங்கியுள்ளார்.
மார்ச் 21ஆம் தேதிக்கு முந்தைய வாரத்தில் இந்த பரிசுகளை அவர் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல காணோஜியா என்பவருக்கு வீடு வாங்குவதற்காகவும், நண்பர் மனோஜ் சகாய்க்கும் தனது பங்குகளை இவர் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த பரிசுகள் மூலம் திரு. வைத்தியநாதனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித ஆதாயமும் பெறப்படவில்லை என்று ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு மதிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த பரிசுகளின் மொத்த மதிப்பானது 5.45 கோடி ஆகும்.
பெரு முதலாளிகளும், தொழிலதிபர்களும் தங்கள் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட பங்கை சமூக நலன் சார்ந்த பணிகளுக்காக வழங்குவது என்பது வாடிக்கையாக இருக்கிறது. அதில் குறிப்பாக ஐடிஎஃப்சி பேங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வைத்தியநாதன், இவ்வாறு பரிசுகளை வழங்குவதில் தனித்துவமான ஸ்டைலை கொண்டவர்.
இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் தன்னிடமிருந்த 9 லட்சம் பங்குகளை 3. 95 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து ஐந்து பேருக்கு வழங்கினார். அவரது உடற்பயிற்சியாளர் மற்றும் வீட்டு வேலை செய்பவர் மற்றும் ஓட்டுநர் ஆகியோருக்கு அவர் இதை பரிசாக வழங்கினார்.
2020 ஆம் ஆண்டு தன்னுடைய பங்குகளை , 500 ரூபாய் கடன் வழங்கிய முன்னாள் கணித ஆசிரியர் ஒருவருக்கு வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தன் வசம் இருந்த 40% பங்குகளை வைத்தியநாதன் இது போல பரிசாக வழங்கியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications