ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட் என்ற பெயரை பந்தன் மியூச்சுவல் பண்ட் என மாற்றம் செய்துள்ளது. ஆக இனி இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பண்ட் திட்டமும் பந்தன் என்ற வார்த்தையுடன் மறுபெயரிடப்படலாம்.
கடந்த 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட், மார்ச் 13 முதல் பந்தன் மியூச்சுவல் பண்ட் என தன்னை புதுபித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
அதோடு வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய பிராண்டின் கீழான திட்டங்களை பெறுவர். ஏற்கனவே ஐடிஎப்சியின் கீழ் உள்ள பிராண்டுகளும் பந்தன் மியூச்சுவல் பண்டுகள் கீழ் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமான சேவை
நலல் அணுகுமுறை, உயர் செயல்பாடுகள் என பலவற்றின் மூலம் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையினை அளிக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மத்தியில் கூடுதலான நுண்ணறிவுகளை கொண்ட ஏஎம்சியின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கபூர், எங்கள் புதிய பெயர் எங்களின் புதிய ஸ்பான்சர்ஷிப்பினையும் பிரதிபலிக்கிறது. இப்போது பந்தன் குழுமத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
வளர்ச்சி அடையும்
மேலும் நிபுணத்துவம் கொண்ட ஊழியர்கள் மற்றும் அதிகப்படியான கவனம் என பலவற்றின் காரணமாக தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சி பாதைக்கு செல்லும். இது மேற்கொண்டு நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைய பயனுள்ள ஒன்றாக இருக்கும். இந்த கூட்டணி பயணம் என்பது மேற்கோண்டு எங்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கலாம். ஆக இதனால் நாங்கள் மிக உற்சாகமாக இருக்கிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு பலன்
மேலும் எங்களின் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இதனால் பலனடையலாம் என நாங்கள் மிகவும் நம்புகிறோம். நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகளால் இது வழி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி ஒப்பந்தம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 2022ல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் பிரிவு
பந்தன் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் (Bandhan Financial Holdings) ஐடிஎப்சி அசெட் மேனேஜ்மென்ட் (IDFC Asset Management) நிறுவனத்தை ₹4,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மூலம் வாங்க கடந்த ஆண்டே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய நிதிச் சேவைகளின் மியூச்சுவல் ஃபண்ட் வணிகமானது மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக சேமிப்பாளர்கள் வழக்கமான வங்கி வைப்புகளிலிருந்து தனித்துவம் பெறுகின்றன. ஆக அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த கூட்டணி என்பது மேற்கொண்டு இந்திய சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள உதவும்.


Click it and Unblock the Notifications