ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியுடன் ஐடிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தை இணைப்பதற்கு ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்-ன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் இரண்டு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து, கார்ப்பரேட் கட்டமைப்பை எளிதாக்கும் முயற்சியில் நிர்வாகம் உள்ளது.
சமீபத்தில் HDFC மற்றும் HDFC வங்கி இணைப்பு மூலம் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் உலகிலேயே 4வது பெரிய வங்கியாக உருவெடுக்கும் அளவுக்கு ஹெச்டிஎப்சி வங்கி உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது IDFC First Bank உடன் IDFC Limited இணைய உள்ளது.

இந்த இணைப்பின் மூலம் ஐடிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 100 பங்குகளுக்கும், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 155 பங்குகள் இணைப்பதற்காக அளிக்கப்பட உள்ளது.
மேலும் மார்ச் 31, 2023 தணிக்கை செய்யப்பட்ட நிதிகளின் அடிப்படையில், இணைப்பின் முடிவில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கின் ஒரு பங்கின் புத்தக மதிப்பு 4.9 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பிற்கு பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு முதல் ஆர்பிஐ வரையில் பல தரப்பில் ஒப்புதல் பெற வேண்டும். HDFC மற்றும் HDFC வங்கி இணைப்பிற்கு சுமார் 15 மாதங்களாக ஆனது குறிப்பிடத்தக்கது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கின் நிர்வாக தலைவர் மற்றும் சிஇஓ வி.வைத்தியநாதன் கூறுகையில், நாங்கள் இப்போது சிறப்பான லாப அளவீட்டில் உள்ளோம், கடந்த 2400 கோடி ரூபாய் வரிக்கு பிந்தைய லாபமாக பெற்றோம். தற்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியுடன் ஐடிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தை இணைக்கும் கார்பரேட் மறுசீரமைப்பில் உள்ளோம்.
அடுத்த 3 வருடத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகப்படியான லாபத்தை வெளியிடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக பல சவால் நிறைந்த பாதையில் பயணித்தோம், தற்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியுடன் ஐடிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தை இணைப்பதன் மூலம் நிலையான அளவீட்டை எதிர்கொண்டு உள்ளோம் என தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications