தனுஷ் நடிப்பில் உருவான 'இட்லி கடை' படம் இன்று வெளியானது. 2025ஆம் ஆண்டில் தனுஷ்-க்கும் சரி, இப்படத்தின் ஹீரோயின் நித்யா மேனன்-க்கும் சரி இது 2வது படம். அக்டோபர் 1 ஆம் தேதி விடுமுறையை டார்கெட் செய்து தியேட்டர்களில் வெளியாகியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் கலவையாக விமர்சனத்தை பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படம், பார்வையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் குபேரா படத்திற்குப் பிறகு அவரது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இட்லி கடை
'இட்லி கடை' படம் ஒரு குடும்ப நாடகமாக உருவாகியுள்ளது. தனுஷ் முருகன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். நித்யா மேனன் கயலாக, அருண் விஜய் அசுவினாக, ராஜ்கிரண் சிவநேசனாக, சத்யராஜ் விஷ்ணு வரதனாக, ஆர். பார்த்திபன் ஆர். அரிவாக, ஷாலினி பாண்டி மீராவாக, சமுத்திரக்கனி மாரிசாமியாக நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராகவும், கிரண் கௌஷிக் ஒளிப்பதிவாளராகவும், பிரசன்னா ஜி.கே. எடிட்டராகவும் உள்ளனர்.
இப்படத்தின் கதை, குடும்ப உறவுகள் மற்றும் சமூகத்தில் சமானியன் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரசியமாக எழுதி இயக்கியுள்ளார் தனுஷ். இந்த மாபெரும் நடிகர் பட்டாளம் படத்திற்கு பெரிய வலுவை சேர்த்துள்ளது.
இட்லி கடை படத்தின் பட்ஜெட்
படத்தின் பட்ஜெட் பற்றி உற்பத்தியாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, ஆனாலும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, இப்படம் 104 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவரா நீங்க? முதல்ல இதை படிங்க
ப்ரீ புக்கிங் வசூல்
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் திங்கள்கிழமை தொடங்கியது, சேக்னில்க் தரவுகளின்படி, இதுவரை 3.91 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளது. இதில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 1.67 கோடி ரூபாய் உள்ளது.
ஓடிடி ரிலீஸ்
இட்லி கடை படத்தின் டிஜிட்டல் உரிமைகளை நெட்ஃப்ளிக்ஸ் சுமார் 45 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு தமிழ் பிலிமிபீட் 5-க்கு 3 மதிப்பெண் கொடுத்துள்ளது. இப்படத்தில் 2ஆம் பாதியில் தொய்வு இருப்பதாக விமர்சனம் இருந்தாலும் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பும் பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த படம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வெற்றி பெருகிறது என்பதை அடுத்த 2-4 நாட்களில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் பொறுத்து அதன் வெற்றி தீர்மானிக்கப்படும். ஆனால் வர்த்தக ரீதியாக தனுஷின் இட்லி கடை பாதி கிணற்றை கடந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவிக்கும் பிரலங்கள்.. அமைச்சர் முதல் அஜித் குமார், நர்கிஸ் ஃபக்ரி வரை.. பெரிய லிஸ்ட் இருக்கு

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications