பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி மற்றும் அனைத்து விதமான வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக iethico என்ற தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மே 6ஆம் தேதி இந்த தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்தியா பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் மருந்து தயாரிக்க தேவையான Active Pharmaceutical Ingredient (API) -ஏபிஐ ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 10 மடங்கு உயர்ந்திருப்பதாகவும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை பொறுத்தவரை தன்னுடைய மருந்து தேவைகளுக்கும் மருந்து தயாரிப்பதற்கான பொருட்களுக்கும் இந்தியாவை தான் அதிக அளவு சார்ந்திருக்கிறது. தற்போது அது தடைபட்டுவிட்டது. இதனால் ஏற்கனவே இருக்கும் மருந்துகளின் விலை உயர்ந்து, அத்தியாவசிய மருந்துகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாக இந்த செய்தி கூறுகிறது.
பாகிஸ்தான் தற்போது வேறு நாடுகளில் இருந்து மருந்துகள் மற்றும் மருந்து தயாரிக்க தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது. இருந்தாலும் அது முழுமையாக முடிந்து பாகிஸ்தான் தனக்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் மருந்து உற்பத்தி மற்றும் மருந்து ஏற்றுமதியில் இந்தியா தான் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி தடையால் பாகிஸ்தானில் amoxicillin , ciprofloxacin போன்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகள், நீரிழிவு மருந்துகள், இதய சிகிச்சை சம்பந்தப்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்த தளத்தின் செய்தி குறிப்பிடுகிறது.
இந்தியாவில் தரமான மற்றும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன, எனவே பாகிஸ்தான் தனக்கு தேவையான 70% மருந்துகளை இந்தியாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. தற்போது இந்தியா அவற்றை நிறுத்தி இருக்கிறது . எனவே பாகிஸ்தான் மற்ற நாடுகளில் அதிக விலைக்கு மருந்துகளையும் மருந்து தயாரிக்க தேவையான பொருட்களையும் வாங்க வேண்டி இருக்கிறது.
ஏற்கனவே பொருளாதார அடிப்படையில் பெரும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. வேறு நாடுகளிடமிருந்தும் வேறு நிறுவனங்களிடமிருந்தும் பாகிஸ்தான் மருந்துகள் இறக்குமதி செய்வதற்கு அந்த நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அந்த மருந்துகளை ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும். இந்த அனுமதி தொடர்ந்து அந்த நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வது மருந்து தயாரிக்கும் பொருட்களுக்கு பொருட்களை கொள்முதல் செய்வது ஆகிய பணிகள் உடனடியாக முடியும் காரியம் கிடையாது.


Click it and Unblock the Notifications