இந்திய தொழில்நுட்பத் துறையில் முக்கியமான நபராகவும், இன்போசிஸின் ஆறு நிறுவனர்களில் ஒருவராகவும் இருக்கும் நந்தன் நீலகேனி, லிங்க்டின் சிஇஓ ரியான் ரோஸ்லான்ஸ்கியுடன் நடத்திய சமீபத்திய நேர்காணலில் தனது இளமை கால பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். இதில் நாராயணமூர்த்தி குறித்துப் பேசியது டெக் உலகை அதிரவைத்துள்ளது.
பொறியியல் படிப்பதிலிருந்து இன்போசிஸைத் தொடங்குவது வரை, தனது வாழ்க்கையை மாற்றிய முடிவுகள் பெரும்பாலும் தன்னிச்சையாக எடுக்கப்படாத கூறும் நந்தன் நீலகேனி, இந்த இண்டர்வியூவில் தனது ஆரம்ப காலத்தை நினைவு கூர்ந்தார்.

1960 மற்றும் 70 களில் இந்திய மாணவர்கள் பொதுவாக பொறியியல் அல்லது மருத்துவத்தைத் தேர்வு செய்தனர். ஆனால் நான் தொழில்நுட்ப உலகத்தால் ஈர்க்கப்பட்டேன். என்னுடைய தந்தையின் விருப்பத்தை மீறி, IIT மெட்ராஸில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்குப் பதிலாக IIT மும்பையில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்கத் தேர்வு செய்தேன்.
இதுதான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இந்த முடிவு எதிர்காலத்தில் இப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கும் என்பது அப்போது எனக்கு தெரியலில்லை என நந்தன் நீலகேனி கூறினார்.
1978 ஆம் ஆண்டில், நந்தன் நீலகேனி வாழ்க்கை மற்றொரு முக்கிய திருப்பத்தை ஏற்பட்டுத்தியதாக கூறும் அவர், டெக் உலகம் மீது தீரா காதல் கொண்ட தனக்கு அப்போது பாட்னி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு நேர்முக தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது.
இப்போது பாட்னி கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தின் சாப்ட்வேர் பிரிவின் தலைவராக இருந்தவர் நாராயண மூர்த்தியை நான் முதல் முறையாக சந்தித்தேன். நாராயணமூர்த்தி-யின் திறன், பேச்சு, கனவு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன் என கூறினார் நந்தன் நீலகேனி.
"அவர் என்னிடம் ஒரு மலையிலிருந்து குதிக்கச் சொன்னால், கூட நான் குதித்திருப்பேன்" என்று நந்தன் நீலகேனி இந்த இண்டர்வியூவில் கூறினார். இதனாலேயே தான் பாட்னி கம்ப்யூட்டர்ஸில் சேர்ந்ததாகவும் அவர் கூறினார். இந்த காலகட்டம் தான் மெயின்ப்ரேம் கம்பியூட்டர்கள் எல்லாம் மினி கம்பியூட்டர்களாக மாறும் காலகட்டம்.
பாட்னி கம்ப்யூட்டர்ஸில் இருந்த அனுபவம் நந்தன் தொழிலதிபராக மாறுவதற்கான வாய்பை கொடுத்தது. ஏற்கனவே நாராணமூர்த்தி-யால் ஈர்க்கப்படட் நான், அவர் புதிய நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளியிட்டபோது, நானும் அதில் சேர ஒப்புக்கொண்டேன்.
என்னுடன் பணியாற்றிய பலர் நாராயணமூர்த்தி உடன் இணைந்து இன்போசிஸை நிறுவினார். வெறும் 25 வயதில் இந்த தைரியமான முயற்சியில் ஈடுபட்டு இன்று இந்தியாவின் வெற்றிகரமான IT நிறுவனங்களில் ஒன்றாக மாறியது இன்போசிஸ்.


Click it and Unblock the Notifications