மும்பை: இந்தியாவே தற்போது அம்பானி குடும்ப திருமண நிகழ்வு குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் உலகம் எங்கிலும் இருக்கின்ற பிரபலங்கள் தற்போது மும்பையில் தான் குடி கொண்டிருக்கிறார்கள். ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனி தனி விமானங்களில் கூட பலரும் வருகை தந்துள்ளனர். அந்த அளவிற்கு உலக கவனத்தைப் பெற்றுள்ளது ஆனந்த் அம்பானியின் திருமணம். இதற்கு முக்கிய காரணம் அவரது தந்தையான முகேஷ் அம்பானி.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர். உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருப்பவர், ஆசியாவிலேயே பெரும் பணக்காரர் என தன்னுடைய செல்வ வளத்திற்கு புகழ்பெற்றவர் தான் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 10.21 லட்சம் கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகேஷ் அம்பானி தன்னுடைய சொத்தில் நாள்தோறும் 3 கோடி செலவு செய்தால் தற்போது இருக்கும் சொத்தை கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு அவரால் செலவு செய்ய முடியும் என்பது குறித்த ஒரு கற்பனையான பதிவு தான் இது.
முகேஷ் அம்பானி தன்னுடைய சொத்தில் இருந்து தினமும் 3 கோடி ரூபாயை செலவு செய்கிறார் என வைத்துக் கொண்டால் அவருக்கு 3,40,379 நாட்கள் தேவைப்படும். ஓர் ஆண்டில் 365 நாட்கள் இருக்கின்றன, எனவே இந்த எண்ணை ஆண்டுகளுடன் ஒப்பிட்டு நாம் கணக்கீடு செய்தால் 932 ஆண்டுகள் மற்றும் 6 மாத காலத்திற்கு இவரிடம் இருக்கும் சொத்து மதிப்பினை கொண்டு இவர் தினமும் மூன்று கோடி ரூபாய் செலவு செய்யலாம். புதிதாக இவர் சம்பாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது.
இவர் வசம் இருக்கும் சொத்தை மட்டும் வைத்து மிக தாராளமாக 932 ஆண்டுகள் மற்றும் 6 மாத காலத்திற்கு இவரால் வாழ முடியும். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2024-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரைவிலான 6 மாத காலத்தில் மட்டும் 1.98 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான திருபாய் அம்பானியின் மகன் ஆவார். 67 வயதாக கூடிய முகேஷ் அம்பானி தன்னுடைய 24-ஆவது வயதில் தந்தையுடன் சேர்ந்து தொழில்களை கவனிக்க தொடங்கினார். இவர்தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications