டெல்லி: இந்தியாவில் தற்போது பெரும் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் இயங்கி வரும் வேளையில், கடந்த சில மாதங்களாக மானியம் குறித்த குழப்பத்தால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை குறைந்து மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் வளர்ந்தாலும், அதன் விலை அதிகமாக இருப்பதாலும், உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பம், பேட்டரி போன்றவற்றை பெற வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தாலும் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க அதன் உற்பத்தி விலையில் அரசு மானியம் வழங்கியது.

இந்த மானியத்திற்காகவே பலர் ஆர்வமாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கினர். FAME, FAME 2 என இரு திட்டத்தில் மத்திய அரசு மானியம் அளித்த நிலையில் FAME 3 திட்டத்தை அறிவிக்காமல் மத்திய அரசு மானியம் வழங்குவதில் மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்குடன் தற்காலிகமாக EMPS திட்டத்தின் கீழ் சில மாதங்களுக்கு மட்டுமே மானியம் அளிக்கப்பட்டது.
இது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே மானியத்தைப் பெரிய அளவில் மத்திய அரசு குறைத்த நிலையில் மொத்தமாக நிறுத்தும் அச்சத்துடன் இருந்து EV துறைக்கு EMPS திட்டம் மூலம் தற்காலிக நிவாரணம் கிடைத்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் மின்சார வாகன ஊக்கத்திட்டமான 'FAME' (ஃபாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மேனுபாக்சரிங் ஆஃப் எலெக்ட்ரிக் வாகனங்கள் - Faster Adoption and Manufacturing of Electric Vehicles) திட்டத்தின் மூன்றாம் பதிப்பு, சுமார் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், அடுத்த மாதம் புதிய அரசு பதவியேற்றிய முதல் 100 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த புதிய FAME3 திட்டம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கும் நிதி ஊக்கத்தொகையை வழங்கும் என்றும் பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஈடி பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் எலக்ட்ரிக் கார்களை டாக்சி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் வாங்குவதற்கும் இந்த மானியம் பொருந்துமா என்பது ஃபேம் 3 திட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
"முன்பு மார்ச் 2024 இல் முடிந்த ஃபேம் 2 திட்டத்தைப் போன்றே இந்த புதிய திட்டமும் இருக்கும். ஜூன் மாதம் புதிய அரசு பதவி ஏற்ற பிறகு FAME 3 திட்டம் ஒப்புதலுக்காக மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும்," என்று அதிகாரி தெரிவித்தார். ஃபேம் 2 திட்டத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை விலையில் 15% மானியம் வழங்கப்பட்டது.
பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை தற்காலிக திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்திற்கு (EMPS) ரூ.500 கோடி ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் இருந்து மார்ச் மாதம் பெற்றது.
இந்த EMPS திட்டம் ஜூலை வரை நான்கு மாதங்களுக்கு மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனைக்குச் சாதகமாக இருக்கும். இந்த நிலையில் EMPS திட்டத்தை FAME 3 திட்டமாக மாற்றப்படும் பணிகள் அடுத்து ஆட்சி அமைக்கும் அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications