பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்திருக்கும் நிலையில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் வேளையில் எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகும் நிலையில் தான் உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருப்பது மட்டும் அல்லாமல் ஃபிட்ச் மற்றும் மூடிஸ் போன்ற சர்வதேச ரேட்டிங் ஏஜென்சிகள் கூட, பாகிஸ்தான் நாட்டின் தரத்தை திவாலாகும் நிலைக்கு இணையான ரேட்டிங்-ஐ கொடுத்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் திவாலானால் உண்மையில் என்னவெல்லாம் நடக்கும்..?
பாகிஸ்தான்
பாகிஸ்தான் கடைசி நேரத்தில் எப்படியாவது திவாலாகாமல் மீட்கப்படும் என்றும், குறைந்தது சில வாரங்கள், சில மாதங்கள் திவால் ஆகாமல் தவிர்க்கக் கூடும் என்று அந்நாட்டு மக்களும், தலைவர்களும் நம்புகிறார்கள். கடனை மறுசீரமைத்து, புதிய கடன் வாங்குவது மூலம் இந்த நிலையைச் சமாளிக்க முடியும் என்று நம்புகின்றனர்.
பாகிஸ்தான் பொருளாதாரம்
பாகிஸ்தான் பொருளாதாரச் சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் தங்களுடைய அரசியல் தொடர்பு ஆதிக்கத்தைப் பயன்படுத்தி வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதைத் தவிர்த்து வருவது அதிகரித்துள்ளது. பலர் கடனை மறுசீரமைப்பு செய்யவும், தள்ளுபடி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் திவால்
இந்த நிலையைப் பார்க்கும் போது பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது, ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவி பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தற்காலிகமாகக் காப்பற்ற முடியும், ஆனால் நீண்ட கால அடிப்படையில் மீண்டு வர வேண்டும் என்றால் அடிப்படையில் இருந்து மீண்டு வர வேண்டும்.
என்ன நடக்கும்..?
பாகிஸ்தான் திவாலானால் என்ன நடக்கும்..? இதற்குச் சரியான எடுத்துக்காட்டுச் சமீபத்தில் இலங்கை பொருளாதாரம் திவாலான போது மக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது மட்டும் அல்லாமல் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து பொருட்களைச் சூறையாடியதும், அரசியல் தலைவர்களின் வீடுகளைத் தாக்கியதையும் பார்த்தோம். இவை அனைத்திற்கும் காரணம் மக்கள் எரிபொருள், எரிவாயு, பால் போன்ற அடிப்படையான விஷயங்களுக்குக் கூட நாள் கணக்கில் காத்திருந்தது தான்.
இலங்கை
பாகிஸ்தான் நிலை தொடர்ந்து மோசமானால் இலங்கையில் நடந்தது போல் நடக்கவும் வாய்ப்பு உள்ளது, ஆனால் இதேவேளையில் மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ஆட்சியை ராணுவம் பிடிக்கவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் மக்கள் போராட்டத்தை எளிதாக அடக்க முடியும்.
பொருளாதார அளவில் பாதிப்பு
ஆனால் பொருளாதார அளவில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். மொத்தமாகப் பெரும் நிதியியல் மற்றும் பொருளாதாரப் பேரழிவை எதிர்கொள்ள நேரிடும். இதோடு சாதாரணப் பொருளாதார நடவடிக்கைகள் கூட முற்றிலும் சீர்குலைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.
எரிபொருள், மருந்து, உணவு, மின்சாரம்
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய எரிபொருள், மருந்துகள், உணவு, மின்சாரம் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். இதன் விலைகளும் ராக்கெட் வேகத்தில் உயர கூடும். பாகிஸ்தான் ரூபாய் வீழ்ச்சியடைந்து கிட்டத்தட்ட மதிப்பற்றதாகிவிடும். தொழிற்சாலைகள் மூடப்படும், வேலையின்மை அதிகரிக்கும், மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும் காரணத்தால் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடையும்.
அந்நிய செலாவணி
பாகிஸ்தான் நாட்டுக்கு மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் இறக்குமதி மிகவும் கடினமாக இருக்கும், ஏனெனில் அவற்றிற்குச் செலுத்த அந்நிய செலாவணி பாகிஸ்தானில் இருக்காது. இதன் வாயிலாக உற்பத்தி துறை மட்டும் அல்லாமல் சேவைத் துறையும் பாதிக்கும்.
விமான மற்றும் கப்பல் போக்குவரத்து
பேமெண்ட் பிரச்சனை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமான நிறுவனங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களும் பாகிஸ்தானுக்குச் சேவை செய்வதை நிறுத்தும். இதனால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வகைப்படுத்தாத துறையைச் சார்ந்து இருக்கும், இதனால் பாகிஸ்தான் நிலைமை மோசமான நிலையை அடையும்.
கடத்தல், வரி ஏய்ப்பு
பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஏற்படும் தாக்கம் ராணுவம் ஆட்சியைப் படித்தாலும் நடக்கும், திவாலானதாக அறிவிக்கப்பட்டாலும் நடக்கும். இதேபோல் பாகிஸ்தான் வகைப்படுத்தாத துறையை மேலோங்கும் போது கட்டாயம் கடத்தல், வரி ஏய்ப்பு ஆகியவை அதிகரிக்கும்.
ஐஎம்எப் நிதியுதவி
இதில் எது நடந்தாலும் ஐஎம்எப் நிதியுதவி கிடைப்பதில் பிரச்சனை உருவாகும். மேலும் பாகிஸ்தான் திவாலானால் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, UAE, சீனா ஆகியவை உதவக் கூடும். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியனும் உதவ வாய்ப்புகள் உள்ளது.
ரஷ்யா
தற்போது பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்ற ரஷ்யாவால் முடியும், ஏற்கனவே பாகிஸ்தான் தரப்பில் இருந்து ரஷ்யாவிடம் தள்ளுபடியில் கச்சா எண்ணெய் வேண்டும் எனக் கேட்கப்பட்ட நிலையில், ரஷ்யா மறுத்தது. ஆனால் தற்போது ஐரோப்பா மொத்தமாக ரஷ்ய எண்ணெய்யைத் தடை செய்த காரணத்தால் பாகிஸ்தானுக்குத் தள்ளுபடி விலையில் அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications