உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை குறித்த அச்சத்தோடு இருந்தாலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வங்கி திவாலாகும் பிரச்சனை குறைந்துள்ள காரணத்தால் ரெசிஷன் அச்சமில்லை என கூறினாலும் கச்சா எண்ணெய், விலைவாசி உயர்வு, உணவு பணவீக்கம், வர்த்தக மந்தநிலை, வேலைவாய்ப்பு போன்ற பல காரணிகளால் ரெசிஷன் அச்சம் தொடர்ந்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளமாக இருக்கும் Zerodha நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நிகில் காமத் தனது டிவிட்டரில் அமெரிக்காவில் உள்ள ஃபேன்ஸி கல்லூரிகளில் பட்டம் பெற்று, அங்கு பணிபுரிந்து, தற்போது தாயகம் திரும்பி ஏதாவது தொடங்க நினைக்கும் தனது நண்பர்களுக்கு ஒரு முக்கிய பதிவு செய்துள்ளார்.

நிகில் காமத் தனது டிவிட்டரில் Recession Probabilities Worldwide 2023 தலைப்பில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட தரவுகள் அடங்கிய புகைப்படத்தையும், IMF அமைப்பு வெளியிட்டுள்ள World Output Projection 2023 தரவுகள் அடங்கிய புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளாகர்.
உலகளாவில் 2023 ஆம் ஆண்டு ரெசிஷன் உருவாகக்கூடிய வாய்ப்புகள் கொண்ட நாடுகள் பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டு உள்ளது. இந்த தகவுகளின் படி இந்தியாவில் இந்த ஆண்டு ரெசிஷன் உருவாக 0% வாய்ரப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆதாவது இந்தியாவில் ரெசிஷன் ஏற்பட வாய்ப்பே இல்லை என கூறப்பட்டு உள்ளது.

இதேவேளையில் 2023 ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டில் ரெசிஷன் ஏற்பட 75 சதவீத வாய்ப்புகளும், அமெரிக்காவுக்கு 65% வாய்ப்புகளும் இருப்பதாக தெரிவித்துள்ளது ப்ளூம்பெர்க் தரவுகள். கனடாவில், ரெசிஷன் ஏற்பட 60% வாய்ப்பு உள்ளது, நியூசிலாந்து -க்கு 70 சதவீத வாய்ப்பு, ஜெர்மனியில் விகிதம் 60% ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை தவிர இத்தாலிக்கு 60 சதவீத வாய்ப்பும், பிரான்ஸ்-க்கு 50 சதவீத வாய்ப்பும், தென் ஆப்பிரிக்காவுக்கு 45 சதவீத வாய்ப்பும், ஆஸ்திரேலியாலவுக்கு 40 சதவீத வாய்ப்பும், ரஷ்யாவுக்கு 37.5 சதவீத வாய்ப்பும், ஜப்பானுக்கு 35 சதவீத வாய்ப்பும், தென் கொரியாவுக்கு 30 சதவீத வாய்ப்பும், மெக்சிகோவுக்கு 27.5 சதவீத வாய்ப்பும், ஸ்பெயின் நாட்டிற்கு 25 சதவீத வாய்ப்பும், சுவிஸ்-க்கு 20 சதவீத வாய்ப்பும், பிரேசில் நாட்டிற்கு 15 சதவீத வாய்ப்பும், சீனாவுக்கு 12.5 சதவீத வாய்ப்பும், சவுதி அரேபியா-வுக்கு 5 சதவீத வாய்ப்பும், இந்தோனேஷியா-வுக்கு 2 சதவீத வாய்ப்பும் உள்ளதாக ப்ளூம்பெர்க் காட்டியுள்ளது.
Zerodha நிகில் காமத் வெளியிட்ட மற்றொரு புகைப்படத்தில் IMF அமைப்பு வெளியிட்டுள்ள World Output Projection 2023 தரவுகளின் படி REAL GDP தரவுகளைப் பார்த்தால், இந்தியா 5.9% REAL GDP உடன் முதல் இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா 1.6% REAL GDP வளர்ச்சியையும், கனடா 1.5% உடனும் கடைசி இடத்தில் உள்ளது.
இதை தொடர்ந்து தனது பதிவில் Zerodha நிகில் காமத் அமெரிக்காவில் உள்ள ஃபேன்சி கல்லூரிகளில் பட்டம் பெற்ற, அங்கு பணிபுரியும் எனது பல நண்பர்களுக்கு, ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்க இந்தியாவிற்கு வர திட்டமிட்டால் அடுத்த 10 வருடத்திற்கு இந்தியா சிறந்த வர்த்தக இடமாக இருக்கும் என்பதை அனைத்து குறியீடுகளும் காட்டுகிறது என தெரிவித்தார்.
பல இந்தியர்கள் சிறந்த கல்வி வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் நிதி உதவி மற்றும் உதவித்தொகை கிடைப்பதற்காக வெளிநாடு செல்ல விரும்புகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்தியா இளம் தலைமுறையினர் தொழில்முனைவோராக மாறுவதற்கு ஏராளமான வாய்ப்புகளுடன் ஒரு 'ஸ்டார்ட்அப் ஹப்' ஆக உருவாகி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications