பொதுவாக நாம் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நிலையங்களில் தின்பண்டங்கள், குளிர் பானங்கள் போன்ற உணவு பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அதை நாம் எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம். MRP விலைக்கும் கூடுதலாக பொருட்களை விற்பது, விதிமீறல் மற்றும் ஒரு குற்றமாகும். இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது, எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
கடைக்காரர் MRP-ஐ விட அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் என்ன செய்யலாம்!
அதிகபட்ச விலை (MRP)
இந்தியாவில் சட்ட அளவியல் சட்டம், 2009 இன் (Legal Metrology Act, 2009) படி, பொருளின் மீது அச்சிடப்பட்ட MRP என்பது வாடிக்கையாளர் ஒரு பொருளுக்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச விலையாகும்.
MRP என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் அதிகபட்ச விலையாகும். MRP என்பது ஒரு பொருளின் உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரால் ஏற்படும் பிற செலவுகள் மற்றும் வரிகள் ஆகியவற்றைச் சேர்த்துதான் கணக்கிடப்படுகிறது.
புகார்
நீங்கள் பொருட்கள் வாங்கும் கடையில், அக்கடைக்காரர் எம்ஆர்பியை விட அதிகமான விலையை வசூலிப்பதை உணர்ந்தால், கடை அமைந்துள்ள மாநிலத்தின் சட்ட அளவியல் துறையிடம் (Legal Metrology Department) உடனடியாக புகார் அளிக்கலாம்.
HelpLine எண்ணை தொடர்பு கொள்ளவும்!
நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண் - 1800-11-4000/ 1915 ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது அவர்களின் தனிப்பட்ட மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் மன்றத்தில் புகார் அளிக்கவும் வசதி உள்ளது.
ஒரு நுகர்வோர் 8800001915 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம் அல்லது NCH ஆப் மற்றும் Umang ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன்
கடைக்காரர் எம்ஆர்பியை விட அதிகமாக வசூலித்தால், https://consumerhelpline.gov.in/user/signup.php என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் நுகர்வோர் ஆன்லைனில் புகார் செய்ய முடியும். நேஷனல் கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் என்பது வழக்குக்கு முந்தைய முதல் படியாகும்.
அபராதம் மற்றும் இழப்பீடு!
நீங்கள் புகார் செய்தும் பலனில்லை எனில் NCDRC இணையதளம், மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணையம் போன்ற பொருத்தமான நுகர்வோர் ஆணையத்தை நேரடியாகவே அணுகலாம்.
விசாரணைக்குப் பிறகு விதிமீறல் கண்டறியப்பட்டால், அக்கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தொகைக்கு இழப்பீடு பெற நுகர்வோருக்கும் உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications