பெங்களூரு: பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை வேண்டி விண்ணப்பம் செய்யும்போது அந்த விண்ணப்பத்தில் நமது கல்வித் தகுதி என்ன, இதற்கு முன்பு நம்முடைய பணி அனுபவம் என்ன என்பது குறித்த கேள்விகள் இடம் பெறும்.
குறிப்பாக இந்த குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என ஏன் நினைக்கிறீர்கள் என்ற ஒரு கேள்வி கட்டாயம் இடம்பெறும். இந்த பதில்களின் அடிப்படையில் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்தவர்களை ஷார்ட் லிஸ்டு செய்யும்.

அந்த வகையில் அர்வா ஹெல்த் Arva Health என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பம் செய்தவர், தனக்கு ஏன் இந்த வேலை வேண்டும் என ஒரு குறிப்பு வழங்கியுள்ளார், அது சமூக வலைதளங்களில் டிரண்டாகியுள்ளது.
அர்வா ஹெல்த் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான டிப்பாலயே பஜாஜா தங்கள் நிறுவனத்திற்கு ஃபுல் ஸ்டேக் இன்ஜினியர் (full stack engineer)பணிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.
இதனை அடுத்து பலர் அதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் ஒருவரது விண்ணப்பத்தில் இடம்பெற்றிருந்த குறிப்புகள் அவரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
வேலைக்கு விண்ணப்பம் செய்த ஒரு நபர் நீங்கள் ஏன் இந்த பணிக்கு பொருத்தமானவர் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ”இந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை என்றால் நான் என்னுடைய காதலியை திருமணம் செய்து கொள்ள முடியாது, ஏனெனில் உனக்கு வேலை இருந்தால் மட்டுமே நான் பெண் கொடுப்பேன் என என் காதலியின் தந்தை கூறுகிறார்” என தெரிவித்துள்ளார்.
இதனை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதும் சில நேரங்களில் புன்னகையை வரவழைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தையும், நூற்றுக்கணக்கானவர்களையும் பின்னூட்டங்களையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் அவருடைய நேர்மையை பாராட்டி இந்த வேலையை நீங்கள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் மற்றொரு பயனர் தயவு செய்து அவருக்கு வேலை கொடுங்கள் இதனால் அவரது வாழ்க்கையும் முன்னேறும் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வேலை அந்த நபருக்கு வழங்கப்பட்டதா அவர் நேர்காணல் செய்யப்பட்டாரா என்பது குறித்த விவரங்களை அந்த சிஇஓ வெளியிடவில்லை.
அர்வா ஹெல்த் என்பது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய ஒரு ஹெல்த் கேர் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். இது பெண்களுக்கு வீட்டிலேயே கருவுறுதல் சோதனைகளை செய்யும் வசதிகளை வழங்குகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications