எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கான ஊதியம் கிடைக்கவில்லை என பலரும் புலம்பி வருகின்றனர். சம்பள உயர்வு கிடைக்காதா? என ஏங்கியுள்ளனர். அதிலும் ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் சும்மா இருந்தே லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் என்ற வித்தியாசமான செய்தியை நாம் கேள்விப் பட்டிருப்போம். சமூக வலைதள பிளாட்ஃபாரம்களில், மக்கள் சில நேரங்களில் மிகவும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை விருப்பங்கள் மற்றும் ஈடுபாட்டிற்காக உருவாக்குகிறார்கள்.

பெங்களூரை தலைமை இடமாக கொண்டுள்ள Topmate நிறுவனம் தான் இந்த விசித்திரமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், Chief dating offier என்ற பணிக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், காதலில் கை தேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். குறைந்தது ஒரு காதல் தோல்வியாவது நிகழ்ந்திருக்கவேண்டும், அல்லது அதை கடந்து வந்திருக்க வேண்டும், மேலும் 3 டேட்டிங் செயலிகளை பயன்படுத்த வேண்டும் மேலும் அதனை நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல என்றும் காதல் டேட்டிங்கில் தற்போதைய டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என தகுதிகளை பட்டியலிட்டுள்ளது. இந்த விளம்பரம் நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இந்தநிலையில், பள்ளி காலத்தில் நான் கடைசி பெஞ்சில் உட்காருவேன். FLAMES போட்டு விளையாடி இருக்கிறேன். நான் இந்த பணிக்கு தகுதியான நபரா? என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். ரொம்பவே வேடிக்கையான வேலை. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறும் போது, ’80 - 90 களுக்கு இடையில் பிறந்தவர்கள் எல்லாம் இதற்கு செட் ஆக மாட்டார்கள் என நினைக்கிறேன். இது genZ தலைமுறைக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறுகிறார்.


Click it and Unblock the Notifications