கார் பிரியர்களுக்கு LUXURY ரக கார்கள் மீது எப்போதுமே ஒரு ஆசை இருக்கும். அதில் இருக்கும் நவீன அம்சங்களை பயன்படுத்தி , புதுமையான கார் அனுபவத்தை பெற வேண்டும் என விரும்புவார்கள்.
அந்த வகையில் கார்ஸ்24 தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் தற்போது 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் சொகுசு கார்களில் சிலவற்றை குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.

Audi A4: இந்தியாவில் 42 லட்சம் ரூபாயில் இருந்து 47 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. செடான் வகையை சேர்ந்த இந்த கார் , காண்போரின் கவனத்தை ஈர்க்க கூடிய தோற்றத்தை பெற்றுள்ளது. எளிதில் மெயின்டென் செய்யக்கூடிய கார் என இத்துறையை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். 1998 சிசி என்ஜினுடன், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் கொண்டுள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு 17.42 கிமீ மைலேஜ் தரக்கூடியது. 5 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் 12.3 அங்குல டிஜிட்டல் டிஸ்பிளேயில் காரின் வேகம் உள்ளிட்ட பல தரவுகளை காணலாம். அனைத்து காலநிலைகளிலும் சிறந்த பயண அனுபவத்தை தரும் வகையில் all-wheel-drive system கொண்டுள்ளது.
BMW 3 Series: இந்தியாவில் கிடைக்கும் பட்ஜெட் விலை சொகுசு காராக இது கருதப்படுகிறது. Sunroof வசதி, 10.25 அங்குள டச் ஸ்கிரீன் வசதி, ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் இணைப்பு வசதி, 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே கொண்டுள்ளது. 8-speed automatic டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டுள்ள இந்த காரில் 5 பேர் வரை பயணிக்கலாம். 3.0 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜின் மாடலுடன் வருவதால் அன்றாட பயணங்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். இந்தியாவில் இது 43.90 லட்சம் முதல் 54 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
Volvo XC40: இது காம்பேக்டான எஸ்யூவி ரக கார் ஆகும். 2023ஆம் ஆண்டில் இது மேலும் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தாராளமாக அமர கூடிய இருக்கைகள், நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது. advanced driver assistance systems கொண்டிருப்பதால் மிக பாதுகாப்பான ஒரு சொகுசு காராக கருதப்படுகிறது. இது இந்தியாவில் 46.40 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 1969 சிசி என்ஜின் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12.18 கிமீ மைலேஜ் தருகிறது. 5 பேர் அமர்ந்து செல்லலாம், ஏர் ஃபியூரிஃபையர் கொண்டது.
Skoda Superb: சிறந்த செடான் வகை சொகுசு கார் இது. இந்தியாவில் 34.19 லட்சம் ரூபாய் முதல் 37 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. 1984 சிசி பெட்ரோல் என்ஜின் கொண்ட இந்த கார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கிஉ 15.1 கிமீ மைலேஜ் தருகிறது. 5 பேர் சௌகரியமாக பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் வார்னிங்ஸ், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், கீ லெஸ் சென்ட்ரல் லாக்கிங் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 8 ஏர்பேக் மற்றும் 5 ஸ்டார் NCAP ரேட்டிங் கொண்ட சொகுசு கார் இது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications