பொழுதுபோக்குகளில் முக்கியமானதாக இருப்பது திரைப்படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்வதுதான். பொதுவாக வாரம் ஒரு படம் என்ற அடிப்படையில், பல்வேறு மொழி திரைப்படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன. அடிக்கடி திரைப்படம் பார்க்க செல்வோர் அதிகம். ஆனால் படம் பிடிக்காமல் பாதியில் வெளியேறுபவர்களும் அதிகம் தான். குறைந்தது ரூ.150 முதல் அதிகபட்ச டிக்கெட்டுகள் எடுத்து படம் பார்ப்பதும் உண்டு.
இப்போதெல்லாம் படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்லும்போது அத்திரைப்படத்திற்கான டிக்கெட் செலவை விட அங்குள்ள உணவுப்பொருட்கள் செலவுதான் அதிகமாக உள்ளது. அதில் படம் சரியில்லை எனில் நாம் செலவு செய்தது வீணாகிவிடுகிறது சங்கடமும் ஏற்படுகிறது. எனவேதான் முக்கால்வாசி மக்கள் புதிய படம் ரீலிஸ் ஆனால், ஓடிடியில் வெளிவரும் வரை காத்திருந்து வீட்டிலேயே படம் பார்க்கின்றனர். எனவேதான் தற்போது இந்த நிலையை மாற்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

அந்த வகையில், ஒருவர் திரைப்படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்லும்போது முழு படமும் பார்க்கவில்லை எனில் பாதியில் திரும்பினால் அவர்களுக்கு டிக்கெட் விலையில் பாதியை திரும்ப கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 50 சதவீத படத்தை மட்டுமே பார்த்தால், அவருக்கு 50 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும். 25 முதல் 50 சதவீதம் படம் மீதி இருந்தால், 30 சதவீதம் டிக்கெட் தொகை திருப்பி தரப்படும். 50 சதவீதத்துக்கு மேல் படம் இருந்தால், 60 சதவீதம் திருப்பி தரப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றி பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரெனாட் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்பவர்கள், வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக 10 சதவீதம் கொடுத்து டிக்கெட்டை ரிசர்வ் செய்ய வேண்டும் எனவும், அந்த குறிப்பிட்ட ஸ்க்ரீனில் உள்ளோர்கள் ஏஐ கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், ரசிகர்கள் புக் செய்யும் டிக்கெட், அவர்களின் இருக்கையுடன் இணைக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே இதன்மூலம் படம் பார்க்கும் ஒருவர் உள்ளே செல்வது முதல் வெளியேறுவது வரை கண்காணிக்கப்படும் என்றும் அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் கணக்கிடப்படும். அதன்பிறகு திருப்பி கொடுக்க வேண்டிய பணத்தை அவர்களுக்கு ஆன்லைன் மூலமே அனுப்பி வைக்கப்படும். என்று கூறியுள்ளார்.
இந்த நடைமுறைகள் பொதுவாக தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 19 சதவீதமும், கொரோனா பரவலுக்குப் பிறகு 25 சதவீதமும் குறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். கொரோனாவுக்கு பின் மக்கள் ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதால், தியேட்டர் வருகை குறைந்துவிட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications