புது வீடு வாங்கினா கார் பரிசு.. அதும் டெஸ்லா கார்.. எந்த ஊரில் தெரியுமா?

பொதுவாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடு வாங்கினால் தங்க காயின் பரிசு, வெள்ளி காயின் பரிசு, கார் பரிசு என கேள்வி பட்டிருப்போம். ஆனால் ஒரு வீடு வாங்கினால் டெஸ்லா கார் பரிசாக கொடுப்போம் என ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த காரின் விலை எவ்வளவு? கார் பரிசாக கொடுத்தால் அந்த வீட்டின் விலை எவ்வளவு? இது உண்மை தானா? அது எந்த ஊரில்? வாருங்கள் பார்க்கலாம்.

புதிய வீடு & புதிய கார்

புதிய வீடு & புதிய கார்

புத்தம் புதிய வீடு ஒன்றை வாங்கினால், புத்தம் புதிய டெஸ்லா கார் பரிசாக வழங்கப்படும் என ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று விளம்பரம் கொடுத்துள்ளது. இது நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, ஏழு படுக்கையறை வீட்டின் விற்பனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான அறிவிப்பு

கவர்ச்சிகரமான அறிவிப்பு

தீவு நாட்டின் ரியல் எஸ்டேட் சந்தையானது ஒரு வருடத்திற்கு மேலாக சரிந்து வரும் நிலையில், வீட்டு உரிமையாளர்கள் இதுபோன்ற கவர்ச்சிகரமான அறிவிப்பினை கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் டெவலப்பர்கள், வீடு விற்பனையை அதிகரிக்க முடியும் என நம்புகின்றனர்.

 யார் கொடுத்த விளம்பரம் இது?

யார் கொடுத்த விளம்பரம் இது?

மேற்கண்ட கவர்ச்சிகரமான அறிவிப்பினை, ரியல் எஸ்டேட் ஏஜென்டான பார்பூட் மற்றும் தாம்சன் நிறுவனங்கள் கொடுத்துள்ளன. ஏழு படுக்கையறைகளை கொண்ட இந்த வீட்டை வாங்குபவர்களுக்கு, டெஸ்லா இன்க் மாடல் ஒய் கார் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தேவை சரிவு

தேவை சரிவு

ஏஜெண்டுகளின் இந்த அறிவிப்பானது தேவை வீழ்ச்சி கண்டுள்ளதை தெளிவாக சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது. ஆக விற்பனையாளர்கள் வீடுகளை விற்பனை செய்ய இப்படியானதொரு விளம்பரங்களை கொடுத்து வருகின்றன.

இந்த தீவு நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகளவில் உள்ள நிலையில் விற்பனையானது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை வீடு வாங்க தூண்டவில்லை எனலாம்.

வீடு விலை சரிவு

வீடு விலை சரிவு

கார்டியனின் அறிக்கையின் படி, இந்த மாதம் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிலைத்தன்மை அறிக்கையின் படி, வட்டி விகிதம் 7%-ஐ எட்டினால், கடந்த ஆண்டு கடன் வாங்கியவர்களில் கிட்டதட்ட பாதிபேர் தங்களது வருமானத்தில், 50% அவர்களது கடனை திருப்பிச் செலுத்துவதற்கு செலவிட வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. ஆக்லாந்தில் உள்ள சராசரி வீட்டின் விலை கடந்த ஆண்டினை காட்டிலும் 3.4% குறைந்துள்ளது என்பதை காட்டுகின்றது.

வீடு விற்பனை சரிவு

வீடு விற்பனை சரிவு

ரியல் எஸ்டேட் இன்ஸ்டிடியூட் தரவின் படி, சராசரி வீட்டின் விலை கடந்த ஆண்டினை காட்டிலும் 10.9% குறைந்து, 8,25,000 டாலராக குறைந்துள்ளது. அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் மொத்த அளவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 34.7% குறைந்து, 4,892 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 7,486 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புற நகர்ப் பகுதியில் வீடுகள்

புற நகர்ப் பகுதியில் வீடுகள்

கார்டியனின் கூற்றுப்படி, ஆக்லாந்தில் புறநகர் பகுதியில் விற்பனைக்கு 400-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் உள்ளது. அவற்றில் பல மாதங்கள் சந்தையில் உள்ளது. எது எப்படியோ பார்பூட் & தாம்ப்சன் கொடுத்த அறிவிப்பால் விற்பனை களைகட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+