நம் நாட்டில் பெரும்பாலான நகரங்களில் யாசகம் கேட்டு வாழ்பவர்களை சாலை மற்றும் வீதிகளில் அதிகம் காண்கிறோம். பொதுவாக, அவர்கள் உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை ஆகியவை ஏதுமின்றி ஆதரவற்றி அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சில இடங்களில் சாதாரண மக்கள் இவர்களுக்கு பணத்தை அள்ளி கொடுப்பதும் உண்டு. அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி தருவதும் உண்டு. ஆனால், ஒரு சில இடங்களில் அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம். இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதேபோல், தனியார் அறக்கட்டளை சார்பில் இவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது ஆங்காங்கே நடந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது நமது நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் உள்ள இந்தூரில் பிச்சை எடுப்பது தடை செய்யப்படுகிறது. அதன்படி வரும் ஜனவரி மாதம் முதல் பிச்சை போடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் கைது செய்யப்பட உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, நகரில் யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்கள் யாரும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

எனவே, வரும் ஜனவரி 1ம் தேதி புது ஆண்டு தொடக்கம் முதல், யாராவது பிச்சைக்காரர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிச்சை போடும் நபர்களைக் கண்காணித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே, பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டு, பிச்சை எடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் கூறியுள்ளார். இந்த மாத இறுதி வரை பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் எனவும், இதுகுறித்த அடுத்த நடவடிக்கை விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.மேலும், பிச்சை போடுவதன் மூலம் அந்த பாவத்தில் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள். அப்படிச் செய்ய வேண்டாம் என்று இந்தூர் மக்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிச்சை எடுக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அம்மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக டெல்லி, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக இந்த திட்டத்தின் அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறுகையில், இதுதொடர்பான ஆய்வில் பிச்சை எடுப்பவர்களில் பெரும்பாலானோர்களிடம் சொத்துக்கள் இருப்பதுடன் பெரிய வீடுகள் இருப்பதாகவும், அவர்களது குடும்பம் நல்ல நிலையில் இருப்பதாகவும், சிலர் வங்கிகளில் வேலை செய்வதாகவும், சிலர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இது தவிர இந்தூரில் பிச்சை எடுக்க ராஜஸ்தானைச் சேர்ந்த சிலர் குழந்தைகளுடன் இங்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் ஹோட்டலில் பதுங்கி இருந்த நிலையில், அவர்களையும் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில் மீட்கப்படும் பிச்சைக்காரர்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பானது முதல் ஆறு மாதங்களுக்கு தங்குமிடம் வழங்குவதுடன் வேலையை வாங்கி தருவதாகவும், அவர்கள் பிச்சை எடுக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications