1980களில் நம் நாட்டின் சாலைகளில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் பிரீமியர் ஆட்டோமொபைல்ஸின் காலாவதியான கார் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்து இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கம், நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் கார்களை உருவாக்குவதற்காக சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆஃப் ஜப்பான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 1982ல் கார் தயாரிப்பு (மாருதி உத்யோக் லிமிடெட்) நிறுவனத்தை தொடங்கியது. இந்த கூட்டு நிறுவனத்தில், மத்திய அரசு 26 சதவீத பங்குகளை கொண்டு இருந்தது.
1983 டிசம்பரில் ரூ.47,500க்கு மாருதி 800 மாடலை மாருதி அறிமுகம் செய்தது. இது மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. அன்று தொடங்கிய இந்நிறுவனத்தின் வெற்றி பயணம் இன்று வரை தொடருகிறது. 2003 ஜூலையில் மாருதி சுசுகி நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. ஐபிஓவில் ரூ.125 என்ற விலையில் பங்குகள் வெளியிடப்பட்டது. அந்த மாதம் 9ம் தேதியன்று மாருதி சுசுகி பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு அந்த பங்குகள் மீது வர்த்தகம் தொடங்கியது. அன்றைய வர்த்தகத்தின் முடிவில் மாருசு சுசகி பங்கின் விலை வெளியீட்டு விலையை காட்டிலும் 32 சதவீதம் உயர்ந்து ரூ.164ல் முடிவுற்றது.

அப்போது மத்திய அரசு தன் வசம் இருந்த 26 சதவீத பங்குகளை ஒரு பங்கு ரூ.125 என்ற விலையில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஓவில் ரூ.125 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுசுகி பங்கு இப்போது நினைத்து பார்க்க முடியாத விலையில் உள்ளது. 2024 செப்டம்பரில் மாருதி சுசுகி இந்தியா நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.13,675ஐ எட்டியது. 2003ல் மாருதி சுசுகியின் புதிய பங்கு வெளியீட்டில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் 14 ஆண்டுகளில் 100 மடங்கு வருமானம் சம்பாதித்து இருக்கலாம்.
இது தொடர்பாக Stockifi.in நிறுவனத்தின் நிறுவனர் அபிஜித் சோக்ஷி கூறுகையில், மாருதியின் ஐபிஓவில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்து இருந்தால் (ரூ.125 விலையில் 800 பங்குகள்), உங்கள் முதலீடு 2017ம் ஆண்டுக்குள் ஒரு பங்குக்கு ரூ.10,000 என்ற விகிதத்தில் ரூ.1 கோடியாக உயர்ந்திருக்கும். இது 100 மடங்கு வருமானமாகும். பங்கின் பட்டியலிடப்பட்ட விலை ரூ.165 என்ற விலையில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தாலும் அது 2024ம் ஆண்டுக்குள் 75 மடங்கு வருமானத்தை கொடுத்து இருக்கும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications