மும்பை: நீங்கள் திருமணமான இந்துவாக இருந்தால் உங்களால் கூடுதலாக வருமான வரி சேமிக்க முடியும் என பில்லியனியர் நிதின் காமத் கூறியுள்ளார். ஸெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நிதின் காமத் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வருமான வரி சட்டத்தின் பிரிவில் HUF - HINDU UNDIVIDED FAMILY, அதாவது பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் என ஒரு தனி பிரிவு உள்ளது. இந்த தனி பிரிவின் கீழ் தனி நபர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து வரிச்சலுகைகளையும் பெற முடியும் என ஸெரோதா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதின் காமத் கூறியுள்ளார்.

நீங்கள் திருமணமானவர், மேலும் நீங்கள் ஒரு இந்து என்றால் ஹெச்யுஎஃப் பிரிவை பயன்படுத்தி நீங்கள் சரியாக திட்டமிட்டு கூடுதல் வரிகளை சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்திய வருமான வரி சட்டத்தின்படி ஹெச்யுஎஃப் என்பது தனி அமைப்பாக கருதப்படுகிறது, எனவே நீங்கள் தனி ஆளாக ஒருபுறம் வருமான வரி விலக்கை பெறலாம், அதேபோல ஹெச்யுஎஃப் பிரிவின் கீழ் பிரிக்கப்படாத இந்து குடும்பமாகவும் வருமான வரி விலக்கை பெறலாம் எனக் கூறியுள்ளார்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சொத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் ஆகியவற்றை உங்கள் குடும்பத்திற்கு என்ன ஒரு தனியாக டீமேட் கணக்கு தொடங்கி ஹெச்யுஎஃப் -இன் கீழ் கணக்கு காட்டி வருமான வரி சலுகைகளை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்திய வருமான வரி சட்டத்தின் பிரிவு 2 (31)இன் படி, பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் ஒரு தனி நபராக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு என பான் எண் கொடுக்கப்படுகிறது. எனவே இதனை பயன்படுத்தி வருமான வரியை தாக்கல் செய்யலாம். ஒரு தனிநபருக்கான அனைத்து சலுகைகளும் இதில் கிடைக்கும். ஜெயின் மற்றும் சீக்கிய குடும்பத்தினர்களுக்கும் இது பொருந்தும் என இந்திய வருமான வரி சட்டம் கூறுகிறது.
நிதின் காமத்தின் எக்ஸ் தள பதிவுக்கு பல்வேறு பயனாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலான இந்தியர்கள் இந்த பிரிவினை பயன்படுத்த தவறுவதாகவும் இது மிகப்பெரிய கேம் சேஞ்சர் எனவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.
"திருமணமான இந்துக்களே இதனைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், வரி சேமிப்புக்கான ஒரு உத்தி மட்டுமல்ல, இது ஒரு கேம் சேஞ்சர்" என டேஸ் இன்ஃபோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அமீத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த பிரிவை பயன்படுத்தி உங்களது நிதி மேலாண்மையை வலுப்படுத்துவதோடு சிறந்த பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என கூறியுள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கேபிஎஸ் சிந்து "நான் எப்பொழுதுமே இதை கூறுவேன் ஒரு இந்து திருமணமான பிறகு உடனடியாக ஹெச்யுஎஃப் கணக்கை துவங்க வேண்டும். பொதுவாக ஒரு குழந்தை பிறந்தால் தான் இந்த கணக்கை துவங்க முடியும் என்ற ஒரு போலியான கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கு அவசியமில்லை சீக்கியர்கள் ஜெயினர்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புத்திசத்தை பின்பற்றுபவர்கள் கூட இந்த பிரிவின் கீழ் பயனடையலாம்" என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications