அகமதாபாத்: எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மை படிப்புகளுக்கு புகழ்பெற்ற நிறுவனங்களாக ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் ஓராண்டு எம்பிஏ படிப்பை முடித்த மாணவர்கள் வழக்கமாக 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்தில் வேலை பெறுவார்கள். ஆனால் அகமதாபாத் ஐஐஎம்-இல் நடப்பாண்டில் அது 50 லட்சம் ரூபாய் என குறைந்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவு இது என சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு அகமதாபாத் ஐஐஎம்-இல் ஓராண்டு எம்பிஏ படிப்பை முடித்தவர்கள் 1.08 கோடி ரூபாய் ஆண்டு ஊதியத்தில் வேலை பெற்றனர். இந்த கல்வி நிறுவனத்தில் நடப்பாண்டில் ஓராண்டு எம்பிஏ படிப்பை முடித்த 147 மாணவர்களில் 126 பேர் கேம்பஸ் பிளேஸ்மென்ட்க்கு பதிவு செய்திருந்தனர்.

இவர்களில் 121 பேர் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலை வாய்ப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர். 5 பேர் வேலையை ஏற்கவில்லை. இவர்களில் 3 பேர் சுயதொழில் செய்யவும், 2 பேர் குடும்ப தொழிலில் இணையவும் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
அகமதாபாத் ஐஐஎம்-இல் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைத்த வேலையை மாணவர்கள் தேர்வு செய்யாமல் விட்டது இதுவே முதல் முறையாகும். மொத்தம் 150 நிறுவனங்கள் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்தியதாக தெரிகிறது. இதில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதன்முறையாக இங்கே கேம்பஸ் பிளேஸ்மெண்டில் பங்கேற்றுள்ளன.
அகமதாபாத் ஐஐஎம்-இல் 2020ஆம் ஆண்டில் இதே படிப்பை முடித்த மாணவர்கள் அதிகபட்சமாக 81 லட்சம் ரூபாய் ஆண்டு ஊதியத்தில் வேலை வாய்ப்பு பெற்றனர். 2022 ஆம் ஆண்டில் இது 75 லட்சம் என குறைந்தது. 2023ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் ஊதியத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் 2024ஆம் ஆண்டில் இது பாதியளவு சரிந்து 54 லட்சம் என குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் மந்தநிலையே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. நடப்பு ஆண்டில் கன்சல்டிங் துறையை சேர்ந்த நிறுவனங்கள் 26 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன. அடுத்ததாக ஐடி கன்சல்டிங் , வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், சுகாதார துறை மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறை நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.
வரும் காலங்களில் சுகாதாரத்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன பிரிவினை சேர்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்க கூடும் என அகமதாபாத் ஐஐஎம்- இன் பிளேஸ்மென்ட் கமிட்டி தலைவரான விஸ்வநாத் பிங்காலி தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications