இந்தூர், மத்தியப் பிரதேசம்: இந்தியாவின் தலை சிறந்த எம்பிஏ மற்றும் நிதி சார்ந்த படிப்புகளைக் கற்பிக்கும், கல்லூரிகளைப் பட்டியல் போட்டால், தன்னிச்சையாக ஐஐஎம் முதல் இடத்துக்கு வந்துவிடும்.
அப்படிப்பட்ட ஐஐஎம் கல்லூரிகளுக்கு உள்ளேயே கூட தரப் பட்டியல் போட்டி இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஐஐஎம் கல்லூரிகள் என்றாலே அஹமதாபாத், பெங்களூரு போன்ற கல்லூரிகள் நினைவுக்கு வந்துவிடும். ஆனால் ஐஐஎம் இந்தூரை அதிகம் கேள்விப் பட்டு இருக்க மாட்டோம்.
கேள்விப்பட்டு இருந்தாலும், பெரிய அளவில் கவனம் செலுத்தி இருக்க மாட்டோம். இப்போது நம் மொத்த கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது ஐஐஎம் இந்தூர் கல்லூரி. காரணம் ஸ்டைஃபண்ட்
இண்டர்ன்
பொதுவாக எம்பிஏ கல்லூரிகளில், கோடை விடுமுறை காலங்களில், இண்டர்ன் என்று சொல்லப்படும் பணிப் பயிற்சிக்கு மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். சாதாரண கல்லூரி மாணவர்களுக்கு இந்த பணிப் பயிற்சிக் காலத்தில் ஸ்டைஃபண்ட் கிடைப்பதே பெரிய விஷயம். பெரும்பாலும் கிடைப்பதும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும்.
லட்சத்தில் ஸ்டைஃபண்ட்
ஆனால் இந்தியாவின் டாப் எம்பிஏ கல்லூரிகளில் ஒன்றான, ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு பணிப் பயிற்சி காலத்தில் லட்சம் ரூபாய் கொடுத்து பணிப் பயிற்சிக்கு அழைப்பார்களாம். ஆக இரண்டு மாத பணிப் பயிற்சிக்கு ஒரு லட்சம் ரூபாய் அசால்டாக கொடுப்பார்களாம். இப்போது இதில் ஐஐஎம் இந்தூர் ஒரு அதிரடி காட்டி இருக்கிறது.
மாதம் 2 லட்சம்
ஐஐஎம் இந்தூர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு 4 லட்சம் ரூபாய் ஸ்டைஃபண்ட் கொடுத்து, பணிப் பயிற்சி அளிக்க நிறுவனங்கள் முன் வந்து இருக்கிறார்களாம். இந்த ஆண்டு ஐஐஎம் இந்தூர் கல்லூரி மாணவர்களின் சராசரி ஸ்டைஃபண்ட் 1.68 லட்சம் ரூபாயாம். பெரிய தொகை தான்.
மாணவர்கள்
தற்போது ஐஐஎம் இந்தூர் கல்லூரியில் 589 மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இவர்களுக்கு கோடைக் கால பணிப் பயிற்சி கொடுக்க கூகுள், ஆதித்யா பிர்லா, அமேசான், டிலாய்ட்டி, கோல்ட்மென் சாக்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, ஜேபி மார்கன் என பல முன்னணி நிறுவனங்களில் இருந்து வந்திருந்தார்களாம். பணிப் பயிற்சிக்கு தேர்வு செய்யும் போது தான் இந்த 4 லட்சம் ரூபாய் ஸ்டைஃபண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
பெயர் சொல்லவில்லை
எந்த மாணவருக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் ஸ்டைஃபண்ட் கொடுக்க இருக்கிறார்கள், எந்த நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து, பணிப் பயிற்சி அளிக்க இருக்கிறது போன்ற விவரங்களை ஐஐஎம் கல்லூரி நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை.
ம்ம்ம்... இங்கு பலருக்கு மொத்த ஆண்டு வருமானமே 4 லட்சம் ரூபாயைத் தொடுவதில்லை. ஆனால் ஐஐஎம் மாணவர்களுக்கு பணிப் பயிற்சிக் காலத்திலேயே 4 லட்சம் ரூபாய் என்றால் கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications